கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் ஷாக்.. பேனர் கிழிந்து விழுந்ததில் பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த கதி! வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த ராட்சத பேனர் சூறைக்காற்றில் கிழிந்து காற்றில் பறந்து நடுரோட்டில் டூவீலரில் சென்றவர் மேல் விழுந்தது. இதில் அவர் காயமடைந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. கோடை வெயிலுக்கு நடுவே பெய்த இந்த மழை பொதுமக்களை மகிழ்வித்தது.

torn-banner-to-fall-onto-a-moving-bike-on-coimbatore-trichy-highway-near-palladam-in-tiruppur

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அந்த வீடியாவில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்கின்றன. அப்போது சாலையோரம் வைக்கப்பட்ட ராட்சத பேனர் கிழிந்து காற்றில் பறக்கிறது.

சாலையில் டூவீலரில் ஒருவர் செல்கிறார். இந்த சமயத்தில் கிழிந்து தொங்கிய பேனர் திடீரென்று காற்றில் பறந்து சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்த நபரின் மீது விழுகிறது. இதில் நிலைக்குலைந்துபோன அந்த நபர் தடுமாறி டூவீலருடன் சாலையில் விழுகிறார். அவர் காயமடைந்துள்ளார்.

அந்த நெடுஞ்சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் அவரை மீட்டனர். ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர் உயிர் தப்பினார். அதோடு அவர் தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்த சமயத்தில் பின்னால் எந்த வாகனமும் வரவில்லை. ஒருவேளை வாகனம் வந்திருந்தால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.

இதற்கிடையே தான் அந்த சாலையில் வந்தவர் கிழிந்த பேனர் காற்றில் பறந்து டூவீலர் ஓட்டி சென்றவர் மீது விழுவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் சாலையோரங்களில் பேனர் வைக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நேரிட வாய்ப்புள்ளது என்று கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+