"ஜீரோ சீட்.." பிரசாந்த் கிஷோர் நிலைமை தான் விஜய்க்கும் ஏற்படுமாம்.. அவரே சொல்லி இருக்காரு பாருங்க
பாட்னா: பீகார் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் படுதோல்வியை அடைந்தார். இருப்பினும், அது அவரது கட்சிக்குப் பெரிய ஆச்சரியமாக இருக்காது என்றே சொல்லலாம். இதற்கிடையே இதே பிரசாந்த் கிஷோர் தான் முன்பு ஒரு நேர்காணலில் தனது கட்சிக்கும் விஜய் கட்சிக்கும் கிட்டத்தட்ட ஒரே போன்ற தேர்தல் முடிவுகளே கிடைக்கும் என்பது போல பேசியிருந்தார். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
இந்தத் தேர்தலில் தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோரும் போட்டியிட்டார். அவரது ஜன் சூராஜ் கட்சி அங்குத் தனித்துக் களமிறங்கியது. பாஸ்வான் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் கூட்டணி அமைக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், கூட்டணி முடிவுகளை நிராகரித்த பிரசாந்த் கிஷோர் தனித்துக் களமிறங்கும் என்று அறிவித்தார்.

பிரசாந்த் கிஷோர்
அடுத்து பிரசாந்த் கிஷோர் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு நிலவியது. அவர் சொந்தத் தொகுதியான கார்கஹர் அல்லது ஆர்ஜேடி கோட்டையான ராகோபூரில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்தார்.
ஏனென்றால் தேர்தலில் போட்டியிட்டால் ஒரே தொகுதியில் தான் கவனம் செலுத்த முடியும். தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் மாநிலம் முழுக்க பிரச்சாரம் செய்யலாம் என்பதால் அவர் போட்டியிடவில்லை. அதேபோல கடைசி வரை பீகார் முழுக்க பம்பரமாகச் சுற்றி பிரச்சாரமும் செய்தார். இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்தபோது பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியே கிடைத்தது.
படுதோல்வி
தொடக்கத்தில் ஓரிரு தொகுதிகளில் முன்னிலையில் இருந்த நிலையில், இப்போது மாலை எந்தவொரு தொகுதியிலும் ஜன் சூராஜ் கட்சி முன்னிலையில் இல்லை. இதன் மூலம் ஜன் சூராஜ் கட்சி தான் போட்டியிட்ட முதலில் தேர்தலை ஜீரோ இடத்துடன் முடித்துள்ளது. அதேநேரம் இது பிரசாந்த் கிஷோர் எதிர்பார்க்காத ஒன்று என்று சொல்லிவிட முடியாது.
அவர் தொடக்கம் முதலே பீகாரில் தங்கள் கட்சிக்கு இரு முடிவுகள் மட்டுமே கிடைக்கும் என சொல்லி வந்தார். கிடைத்தால் பீகாரில் மிக பெரிய வெற்றி கிடைக்கும்.. அப்படி இல்லையென்றால் மிக மோசமான தோல்வி கிடைக்கும்.. இரண்டிற்கும் நடுவில் 20- 30 சீட் என்பதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்றே பிரசாந்த் கிஷோர் சொல்லி வந்தார். இப்போது அதுதான் அப்படியே நடந்துள்ளது.
என்ன சொன்னார்
மேலும், பழைய நேர்காணல் ஒன்றில் தனது கட்சிக்கும் இதுதான் நிலைமை, விஜய் கட்சிக்கும் கூட இதே நிலை தான் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் தந்தி டிவிக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் இப்போது அரசியலில் பெரிய வெற்றிடம் இருக்கிறது. மக்கள் ஊழலற்ற புதிய அரசியல் மாற்றை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு விஜய் சரியான நபராக இருப்பார் என்றே கருதுகிறேன்.
விஜய்
தமிழ்நாட்டில் அடுத்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் தருவதாகவே இருக்கும். பீகாரிலும் கூட எங்களுக்குக் கிடைத்தால் பெரும் வெற்றி.. இல்லை என்றால் படுதோல்வி தான். இடைப்பட்ட முடிவு இருக்காது. அதேபோல விஜய்யும் 10 அல்லது 12% வாக்குகளைப் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை..
இரண்டே முடிவுகள் தான்.. ஒன்று மக்கள் மாற்றுச் சக்தியாக ஏற்றுப் பெரிய வெற்றியைத் தருவார்கள்.. அப்படி இல்லை என்றால் இன்னும் 5 ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் பணியைச் செய்யச் சொல்வார்கள். இதற்கு நடுவே எதுவும் இருக்காது. எனவே, விஜய் தனித்துப் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம்" என்று கூறியிருப்பார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications