எல்லை மீறிய பிறந்தநாள் கொண்டாட்டம்! நடு ரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக் கேட்ட ஆட்டோ டிரைவர் கொலை!
சென்னை: சென்னை அம்பத்தூரில் நடு ரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதை தட்டிக் கேட்ட ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடும் வழக்கம் தற்போது பெரும்பாலானோர் மத்தியில் உள்ளது. வீடு, அலுவலகங்களில் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம், பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் கொண்டாடும் நிலைக்குச் சென்றது.

இது இன்னும் உச்சமடைந்து, சாலைகளின் நடுவே கேக் வெட்டி கொண்டாடுவது, அரிவாள் - பட்டாக் கத்தி கொண்டு கேக் வெட்டுவது, கொண்டாட்டத்துக்காக தேவையில்லாமல் அப்பகுதிகளில் இருப்பவர்களை வம்புழுக்கு இழுப்பது போன்ற செயல்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில், சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் கொலையில் முடிந்துள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். பிறந்தநாள் கேக்கை தனது நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் வைத்து வெட்டி பிறந்தநாளை கொண்டாடிள்ளார்.
அப்போது, அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் காமேஷ் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டிக்கேட்டுள்ளார். நடுரோட்டுல கேக் வெட்டுனா எப்படி ஆட்டோ ஓட்டுறது என அவர்களிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், கோபமடைந்த அஜய்யின் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர் காமேஷை தாக்கி, கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் தலைமறைவான நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதா எனத் தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications