என்.எல்.சி தனி இயக்குநரிடம் அண்ணாமலை கோரிக்கை.. கிராம மக்களை டெல்லிக்கு அழைத்துச் செல்லவும் திட்டம்!
சென்னை : நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலம் கையகப்படுத்துதலுக்கு நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், என்.எல்.சி நிறுவனத்தின் தனி இயக்குனர் சுப்ரதா சவுத்ரியை நேரில் சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
அப்போது அவரிடம் என்.எல்.சி தொடர்பாக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராம மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்து, அவற்றை நிறைவேற்றித் தர வலியுறுத்தியுள்ளார் அண்ணாமலை.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, நெய்வேலி சுற்று வட்டார கிராம முக்கியஸ்தர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய நிலக்கரி துறை அமைச்சரை சந்திக்க வைக்கவும் பாஜக ஏற்பாடு செய்து வருகிறது.

மக்கள் போராட்டம்
என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தவும், இழப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நெய்வேலி அருகே உள்ள மதுவானமேடு, கரைமேடு, கோபாலபுரம், ஊ.ஆதனூர், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, சாத்தப்பாடி, கத்தாழை, கரிவெட்டி, மும்முடிச்சோழகன் உள்ளிட்ட கிராம மக்கள், தங்களுக்கு முறையான இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், மாற்று குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே நிலங்களை கையகப்படுத்த விடுவோம் எனக் கூறி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்.எல்.சி தனி இயக்குநரை சந்தித்த அண்ணாமலை
இந்நிலையில், என்.எல்.சி தனி இயக்குநர் சுப்ரதா சவுத்ரியை நேரில் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அவரிடம் வலியுறுத்தியுள்ளார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செயல்படுத்த வேண்டும் என்றும், உள்ளூர் இளைஞர்களை குறைந்தபட்சம் மேற்பார்வையாளர் வேலை வரையிலுமாவது நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் அண்ணாமலை.

வீட்டுக்கு ஒரு வேலை
மேலும் நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டுக்கு ஒரு வேலை என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. 1990 முதல் வெவ்வேறு காலகட்டங்களில் நிலம் கொடுத்த பொதுமக்கள் வீட்டில், ஒருவருக்கு வேலை என்ற நியாயமான கோரிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் அண்ணாமலை. அது மட்டுமல்லாது, புதிதாக நிலம் கையகப்படுத்தும் போது, மத்திய அரசு கொடுத்துள்ள வழிமுறைப்படி, நில உரிமையாளர்களுக்கான உரிய இழப்பீடுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், என்.எல்.சி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியை நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்கு அதிகளவில் செலவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்ணாமலையிடம் உறுதி
அண்ணாமலை முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கும், மற்ற உயர் அதிகாரிகளுக்கும் எடுத்துச் சொல்வதாக என்.எல்.சி தனி இயக்குனர் சுப்ரதா சவுத்ரி அண்ணாமலையிடம் உறுதி அளித்துள்ளதாக பாஜகவின் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், என்.எல்.சி விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள முக்கியஸ்தர்களை டெல்லிக்கு அழைத்து சென்று மத்திய நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் நேரில் பேசுவதற்கான ஏற்பாட்டையும் தமிழ்நாடு பாஜக மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை












Click it and Unblock the Notifications