பன்முகத்தன்மை, தனிப்பாதையில் பயணிப்பவர் அஜித்! பிறந்தநாள் வாழ்த்தோடு புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை!
சென்னை: நடிகர் அஜித் குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‛‛பன்முகத்தன்மை கொண்டவர், தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து பயணம் செய்பவர்'' என நடிகர் அஜித் குமாரை அவர் பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் தமிழகத்தை போல் பிற மாநிலங்களிலும் அஜித்தின் படங்கள் அதிக வசூலை குவித்து வருகின்றன.
நடிகர் அஜித் 1971 மே மாதம் ஒன்றாம் தேதி பிறந்தார். அதன்படி இன்று அஜித்தின் பிறந்தநாளாகும். மே ஒன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடும் நாளில் அஜித் பிறந்தநாள் வருவதால் ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சியில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அஜித்துக்கு ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாடி வாழ்த்து தெரிவித்து வருகின்றன் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, அஜித்துக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

பன்முகத்தன்மை, தனிப்பாதை
இதுகுறித்து அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பன்முகத் தன்மையும், தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும், மனநிம்மதியையும் அவருக்கு கொடுக்க வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

‛ட்ரோன்’ இயக்கும் அஜித் படம்
மேலும், அஜித்தின் படம் ஒன்றையும் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். அதாவது ஆளில்லா விமானங்கள் இயக்கும் தக்சா குழுவின் டீ-சர்ட்டை அஜித் அணிந்து இருக்க டீ-சர்ட்டின் பின்பகுதியில் தக்சா, ‛இந்தியா' அஜித் குமார் என எழுதப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு அஜித் ஆலோசகராக உள்ளார். இந்த குழு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றி பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் தான் தக்சா குழுவின் டீசர்ட் அணிந்திருக்கும் அஜித்தின் படத்தை பதிவிட்டு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஓ பன்னீர் செல்வம் வாழ்த்து
முன்னதாக நடிகர் அஜித்துக்கு நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‛‛உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்'' என குறிப்பிட்டு இருந்தார்.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
முகம் முழுக்க சோகம்.. தாயார் மறைவால் துபாயில் இருந்து சென்னை வந்த அஜித்குமார் -
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications