பூனைக்குட்டி வெளியே வந்தது.. அதுவும் திமுகவினரிடமே போய்.. வசமாக சிக்கி கொண்ட பாஜக.. செம சுவாரஸ்யம்
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவிடம் பாஜகவினர் ஓட்டுக் கேட்டுள்ளனர்
சென்னை: இந்த முறை வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக உள்ளது.. அதற்காக எக்குத்தப்பாக போய் சிக்கி கொண்ட விஷயம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எப்போது தேர்தல் பேச்சுவார்த்தை நடந்தாலும், நாங்கள் தனித்து நின்றாலே வெற்றி பெற்றுவிடுவோம் என்பதை மறக்காமல் சொல்லிவிடும் தமிழக பாஜக.. ஆனால், இறுதியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டுவிடும்.
இந்த முறை அப்படி எதுவுமே நடக்கவில்லை.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாதது உட்பட வேறு சில காரணங்களுக்காகத்தான் கூட்டணியில் போட்டியிட முடியாமல் தனித்து பாஜக களமிறங்குவதாக சொல்லப்பட்டுவிட்டது.

பாஜக
தனித்துபோட்டி என்ற துணிச்சல் முடிவு ஏற்படையதே என்றாலும் இது எந்த அளவுக்கு பாஜகவுக்கு சாத்தியக்கூறுகளை பெற்று என்பது ஆவலை ஏற்படுத்தி உள்ளது.. காரணம், இதுவரை இல்லாத அளவிற்கு 11 முனை போட்டி நிலவும் வகையில் தேர்தல் களம் உள்ளது.. எப்படியும் வாக்குகள் பிரியவே செய்யும்.. இது பாஜக தலைவர்களும் உணராமல் இல்லை..

பாஜக
பாஜகவுக்கு தமிழகத்திலேயே கொங்கு மண்டலத்தில் தான் ஓரளவு ஆதரவு உள்ளது.. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 13,000 இடங்களுக்குப் போட்டி நடந்தாலும், இதில், கோவை, சேலத்தில் 2,000 இடங்கள் இருக்கின்றன.. இதில் எத்தனை இடங்களை திமுக கூட்டணி, அதிமுக பிடிக்க போகிறது? என்பது முதல் எதிர்பார்ப்பு.. அதற்கு பிறகுதான், பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கான வாக்குகள் பிரிந்து, அதில் தனிமுத்திரையை யார் பதிக்கிறார்கள் என்பது தெரியவரும்.

பரிசுப்பொருட்கள்
அதேசமயம், திமுக, அதிமுகவை எடுத்து கொண்டால், தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளதால், பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்படுவதாக கூறப்பட்டு வருகின்றன.. குறிப்பாக, திமுகதான் இத்தகைய அராஜகங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதுகுறித்து வீடியோ ஆதாரங்கள் தந்தாலும் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அதிமுக, பாஜக கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

வியப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழகத்தின் தலைநகரில் ஒரு புகார் எழுந்துள்ளது.. அந்த புகார் பாஜகவை நோக்கி பாய்ந்துள்ளதுதான் வியப்பை தந்துவருகிறது.. சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு வார்டில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரமாக அந்த கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொதுமக்கள் என்று நினைத்து திமுகவினரிடமே பாஜகவினர் தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்களாம்..

5 லட்சம்
அதுமட்டுமல்ல, தாமரை சின்னத்துக்கு வாக்களித்தால் ரூ. 5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் அந்த பாஜக நபர்கள் சொல்லி, அதற்கான மாதிரி காசோலைகளையும் வழங்கியிருக்கிறார்கள்.. இதை பார்த்து திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. உடனே பாஜகவினருடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். மருத்துவ காப்பீடு ஆசை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த 3 பேர் மற்றும் 2 பெண்களை பிடித்து பறக்கும் படையினரிடம் திமுகவினரே ஒப்படைத்தனர்..
Recommended Video

மருத்துவ காப்பீடு
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், வங்கி ஒன்றின் பெயரை குறிப்பிட்டு காசோலைகளை தயாரித்து மருத்துவ காப்பீடு வழங்கியதாக தெரியவந்துள்ளது.. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த காசோலையில் பாஜக வேட்பாளரின் கையெழுத்து இருந்துள்ளது.. பிடிபட்டவர்களிடம் இன்னமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. பிரச்சார இறுதி நாளில் பொதுமக்கள் என நினைத்து திமுகவினரிடமே வாக்கு சேகரித்ததுடன் 5 லட்சத்துக்கான மாதிரி காசோலைகளை வழங்கி பாஜகவினர் மாட்டிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications