பாஜக வணிக பிரிவு மாநில துணை தலைவர் தணிகைவேல்.. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்
சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக பாஜக வணிக பிரிவு மாநிலத் துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தணிகைவேல். அவர் கடந்த ஆண்டு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் இணை அமைச்சர் எல் முருகனின் முன்னிலையில் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தவர். அப்போது அவருக்கு வணிகப் பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

மேலும், அவருக்கு சட்டசபை தேர்தலிலும் இவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. திருவண்ணாமலை தொகுதியில் தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலுவை எதிர்த்துக் களமிறங்கினார். இருப்பினும், சுமார் 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தேர்தல் காலத்தில் பொறுப்பற்ற முறையில் தணிகைவேல் செயல்பட்டதே திருவண்ணாமலை தொகுதியில் பாஜக படுதோல்வி அடைய காரணம் என அக்கட்சியினரே தலைமைக்குப் புகார் தெரிவித்தனர். இந்தச் சூழலில் பாஜக நிர்வாகி ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்திலும் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எஸ்.தணிகைவேலை நீக்குவதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வணிக பிரிவின் மாநில துணைத் தலைவர் எஸ். தணிகைவேல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், தற்போது கட்சியில் எவ்வித செயல்பாடும் இல்லாத காரணத்தினால், மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலுடன் கட்சியின் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BJP Business wing State Vice President S. Thanikaivel is removed from all his posts. பாஜக வணிக பிரிவு மாநிலத் துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்.
-
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications