"சிலர்".. சுத்தி வளைக்காமல் பாயிண்டை பிடித்த அண்ணாமலை.. திமுகவிற்கு போட்ட லாக்.. யாரை சொல்கிறார்?
சென்னை: முக்கியமான சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை புகார்களை அடுக்கி உள்ளார். அவர் யாரை சொல்கிறார் என்று கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை திமுக மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்களை அடுக்கி வருகிறார். முக்கியமாக சமீபத்தில் மத மாற்றம் தொடர்பாக பல்வேறு புகார்களை அடுக்கினார்.
மேலும் ஆளுனர் ரவியின் உயிருக்கு ஆபத்து. அவருக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்று அமைச்சர் அமித் ஷாவிற்கும் புகார் அளித்து இருந்தார்.

புதிய குற்றச்சாட்டு
இந்த நிலையில்தான் தற்போது அண்ணாமலை புதிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதில், நேரடியாக சீண்டாமல் முக்கியமான விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார். மத கோட்பாடுகள் மற்றும் இறைநம்பிக்கையை அவதூறாகப் பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார் சிலர்! ஆளும் கட்சியின் ஆசி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

அண்ணாமலை
இதுபோன்ற அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதில் அண்ணாமலை "சிலர்" என்று யாரை குறிப்பிட்டுள்ளார் என்று கேள்வி எழுந்துள்ளது. சில பிரபலங்கள், நட்சத்திரங்கள் கடவுள் மறுப்பு கொள்கை பேசும் வீடியோக்களை பாஜக கடுமையாக எதிர்த்து இருக்கிறது. அதேபோல் திகவினர் பலர் கடவுள் மறுப்பு கொள்கைகளை கடுமையாக பேசி வந்துள்ளனர்.

சிலர் இருக்கிறார்கள்
இந்த பிரபலங்கள் சிலர் திமுகவிற்கு நெருக்கமாக இருப்பவர்களாக பார்க்கப்படுபவர்கள். திமுகவிற்கு நேரடியாக அவர்கள் ஆதரவு அளித்தது இல்லை என்றாலும், கடவுள் மறுப்பு பேசுபவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டை பாஜக வைத்து வருகிறது. சமீபத்தில் கூட பிரபல யூடியூப் சேனல் ஒன்று இதேபோன்று புகார் வைக்கப்பட்டது. இந்து மத கடவுளான நடராஜரை சமூக வலைதளத்தில் அசிங்கமாக பேசியதாக கூறி U2 ப்ரூடஸ் என்ற யூடியூப் சேனல் மீது புகார் வைக்கப்பட்டது. இந்த பிரபலங்கள் சிலர் திமுகவிற்கு நெருக்கமாக இருப்பவர்களாக பார்க்கப்படுபவர்கள். திமுகவிற்கு நேரடியாக அவர்கள் ஆதரவு அளித்தது இல்லை என்றாலும், கடவுள் மறுப்பு பேசுபவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டை பாஜக வைத்து வருகிறது. சமீபத்தில் கூட பிரபல யூடியூப் சேனல் ஒன்று இதேபோன்று புகார் வைக்கப்பட்டது. இந்து மத கடவுளான நடராஜரை சமூக வலைதளத்தில் அசிங்கமாக பேசியதாக கூறி U2 ப்ரூடஸ் என்ற யூடியூப் சேனல் மீது புகார் வைக்கப்பட்டது.

முடக்க கோரிக்கை
இந்த சேனலை முடக்க கோரிக்கை வைத்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதேபோல் இவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் எச். ராஜாவும் மறைமுகமாக குற்றச்சாட்டு வைத்ததாக கூறப்படுகிறது. தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. சிவனை இகழ்ந்தவனை தமிழக அரசே உடனே கைது செய் என்று எச். ராஜா நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அண்ணாமலையும் இதேபோன்ற கோரிக்கையை வைத்துள்ளார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications