என்னாச்சு? ஆளுநர் ரவி தமிழ்நாடு வந்த சில மணி நேரங்களில்.. அண்ணாமலை திடீரென டெல்லி பயணம்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லிக்கு இன்று காலை 7 மணிக்கு பயணம் மேற்கொண்டார்.
டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் இந்த நடைபயணம் தொடங்கப்பட உள்ளது.

ஜனவரி 11ம் தேதி சென்னையில் இந்த பயணம் நிறைவடைய உள்ளது. மொத்தம் 168 நாட்கள் இந்த பயணம் நடைபெறும். இதற்காக பாஜக சார்பாக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2024 தேர்தலை மனதில் வைத்து இந்த நடைப்பயணத்தை பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார்.
சென்னையில் 4 நாட்கள் இந்த நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி அண்ணாமலை ஜனவரி 7, 8, 9 மற்றும் 11 ஆகிய 4 நாட்களில் சென்னையில் நடைபயணம் மேற்கொள்வார். இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லிக்கு இன்று காலை 7 மணிக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா வர உள்ள நிலையில்தான் இதை பற்றி ஆலோசனை செய்ய அண்ணாமலை டெல்லி சென்றதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் ஆர். என் ரவி: ஆளுநர் ஆர். என் ரவி சமீபத்தில்தான் டெல்லி சென்று இருந்தார். அங்கே பல்வேறு சந்திப்புகளை அவர் நடத்தினார். இந்த சந்திப்புகளை முடித்துக்கொண்டு இன்று அதிகாலைதான் ஆளுநர் ரவி தமிழ்நாடு திரும்பினார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர். ஆர். என் ரவிக்கும் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆளுநருக்கு எதிராக புகார்களை அடுக்கி முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு கடிதம் அனுப்பி உள்ளார். ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவர் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த விவகாரத்தில் அண்ணாமலை கருத்து தெரிவித்த போது ஆளுநர்கள் அரசியல் பேச கூடாது என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்தே தற்போது அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அண்ணாமலையின் இந்த திடீர் பயணம் திட்டமிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
திட்டமிடப்படாமல் திடீரென மேற்கொள்ளப்படும் இந்த பயணத்திற்கு பின் என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக டெல்லி சென்ற ஆளுநர் ஆர். என் ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தீவிர ஆலோசனையை மேற்கொண்டார். மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆளுநர் ரவி ஆகியோரின் சந்திப்பில் அரசியலமைப்பின் 355-வது சட்டப்பிரிவு அலசப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 355-வது பிரிவு என்பது அசெம்ப்ளியை சஸ்பெண்ட் செய்வது குறித்து பேசுகிறது.
பேரவையை முடக்கி வைக்க வேண்டுமானால் ஜீரணிக்க முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இருக்க வேண்டும். அல்லது மாநிலத்தில் அசாதாரணமான சூழல் இருக்க வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியது, இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதிக்காதது உள்ளிட்ட பிரச்சனைகளை முதல்வர் ஸ்டாலினுக்கும் கவர்னர் ரவிக்குமான மோதல்கள் உச்சக்கட்டத்தில் இருந்தது.
செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைப்பதாக கவர்னர் எழுதிய கடிதத்தை அடுத்து சட்ட சர்ச்சைகளும் உருவெடுத்தன. இந்த நிலையில்தான், 6 நாள் பயணமாக டெல்லி சென்ற கவர்னர் ரவி, அமித் ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பில், தமிழக அரசு குறித்து நிறைய விசயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் தற்போது அண்ணாமலையும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications