இதுதான் ‛ரூட்’.. பாஜகவில் வானதி சீனிவாசனை காலி செய்ய அண்ணாமலை திட்டம்.. பகீர் கிளப்பிய ராஜீவ் காந்தி
சென்னை: பாஜகவில் பத்திரிகையாளர் ஒருவர் மூலம் ராகவனை காலி செய்த அண்ணாமலை, கோவை சம்பவத்தில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரை காலி செய்ய வேலை செய்து வருகிறார் என திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி பகீரங்கமாக குற்றம்சாட்டினார்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் ஜமோசா முபின் என்பவர் இறந்தார். இவரிடம் 2019ல் என்ஐஏ விசாரணை நடத்தி இருந்தது.
இதில் சதிச்செயல்கள் இருக்கலாம் என கருதப்பட்டது. மேலும் ஜமேஷா முபின் உடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி பேட்டி
இந்நிலையில் தான் கோவை கார் வெடிப்பு விஷயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, காவல்துறை, தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு பதிலடியாக தமிழக அரசு, காவல் துறை தரப்பில், அண்ணாமலை அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை கூறி வருகிறார் என விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கோவையை பதற்றமாக வைக்கும் அண்ணாமலை
கோவை சம்பவத்தில் எந்தவித அடிப்படைஅறிவும் இன்றி கோவையை பதற்றமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அண்ணாமலை செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்து வரும் தொழில் நிறுவனங்களை, ஐடி நிறுவனங்கள் கோவைக்கு வருகின்றன. பெங்களூரில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது எனக்கூறி PayCM ஆக கர்நாடக முதல்வர் இருக்கிறார் என தொழில் துறையினர் நினைத்து இடம்பெயர்கின்றனர். பெருமைமிகு கன்னடன் எனக்கூறி அண்ணாமலை, இந்த நிறுவனங்களை கர்நாடகா கொண்டு செல்ல வேண்டி கோவை பதற்றமாக உள்ளது. இங்கு வந்தால் தொழில் செய்ய முடியாது என மீண்டும் மீண்டும் அண்ணாமலை கூறி வருகிறார்.

மத்திய அரசு இன்னும் கேட்கவில்லை
ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக இருந்தால் உரிய ஆதாரங்கள் அல்லது சரியான தகவல்கள் இருந்தால் அண்ணாமலை மாநில அரசு அல்லது மத்திய அரசுக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அவர் செய்யவில்லை. தற்போது கோவை வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்து 3 நாட்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் வழக்கின் ஆதாரங்களை ஒப்படைக்கும்படி என்ஐஏ சார்பில் தமிழக போலீசாரிடம் கேட்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் எந்த கடிதமும் எழுதவில்லை. இருப்பினும் தமிழக பாஜக சமூக பதற்றத்தை ஏற்படுத்தி அரசியல் செய்ய துடித்து வருகிறது.

உள்நோக்கத்துடன் அண்ணாமலை
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டில் இறந்தார். இதனை பாஜகவை சேர்ந்த ஒருவர் பயங்கரவாத தாக்குதல் என கூறினார். அப்போது அண்ணாமலை கண்டிக்கவில்லை. சரியாக இருக்குமோ என பாஜக தலைவர்கள் பேசவில்லை. முப்படையின் தளபதி என்பது ஏறத்தாள குடியரசு தலைவருக்கு நிகரான பதவி. அவர் இறந்த நிலையிலும் கூட தமிழக ஆளுநர் ஆர்என் ரவி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஊட்டி சென்று இறுதி சடங்கு சென்று உடலை டெல்லிக்கு அனுப்பினார். இது எங்களின் கடமை. ஆனாலும் கடமையை செய்யாத அண்ணாமலை உள்நோக்கத்துடன் பேசி வருகிறார்.

முபின் பெயர் இல்லை
புல்வாமா தாக்குதல் நடந்தது. இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி ஏதாவது பேசினார்களா?. பேசவில்லை. ஏனென்றால் அதுபற்றி அவர்கள் பேசவேண்டிய அவசியம் இல்லை. 18 ம் தேதி மத்திய அரசு அனுப்பிய கடித்ததில் முபின் பெயர் இருப்பதாக அண்ணாமலை கூறினார். அப்படியொரு அறிக்கை தமிழக அரசுக்கு வரவில்லை. இந்த விஷயத்தில் முழுபூசணிக்காயை அண்ணாமலை சோற்றில் மறைக்க பார்க்கிறார். மத்திய அரசிடம் இருந்து வந்தது அறிக்கை என்பது பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் இங்குள்ள இந்து தலைவர்களுக்கு பாதுகாப்பை கூட்டுங்கள் என்று மட்டும் தான் கூறப்பட்டு இருந்தது. அது ஒன்றும் ராணுவ ரகசியமான அறிக்கை அல்ல. மாதம்மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் அறிக்கை போன்றது தான் அது. தமிழ்நாட்டில் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து கூட்டாக செயல்பட்டு மக்களிடம் அச்சம் ஏற்படுவதை தடுக்க வேண்டும். மக்களிடம் பதற்றம் இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆனால் அண்ணாமலை பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

வானதி சீனிவாசனை காலி செய்ய..
தமிழ்நாட்டு அரசியலுக்கு வர வேண்டும் என அண்ணாமலைக்கு முன்கூட்டியே நோக்கம் இருந்தது. நடிகர் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை குறித்து ஐஐஎம்மில் ஆவர் ரிசர்ஜ் செய்துள்ளார். ஒன்றரை ஆண்டில் தமிழக பாஜக தலைவராக உள்ளார். பாஜகவின் ராகவன் என்பவரை பத்திரிகையாளர் ஒருவரை வைத்து காலி செய்தார். இப்போது வானதி சீனிவாசனை உள்ளிட்டோரை காலி செய்ய வேலைகள் நடப்பதாக நான் பார்க்கிறேன். சொந்த கட்சியில் பந்த் அறிவிக்கப்பட்டதே அண்ணாமலைக்கு தெரியவில்லை. முதலில் அவர் சொந்த கட்சியில் உள்ள பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்'' என்றார்.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications