நேரடி அரசியலில் விஜய்.. நடிகர் அஜித் குமாருக்கு அளிக்கப்பட்ட விருதில் அரசியல் இருக்கா? குஷ்பு பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித் குமாருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு பின் அரசியல் இருக்கிறதா என்ற கேள்விக்கு பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு பதில் அளித்துள்ளார். இதில் எந்த அரசியலும் இல்லை என்று கூறிய அவர், பத்ம விருதுகள் நியாயமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் அஜித் குமார் அளித்த பங்களிப்புக்காக மத்திய அரசு இந்த விருதினை வழங்கியுள்ளது. இதன் காரணமாக அஜித் குமாரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

padma awards ajith kumar vijay

இதுகுறித்து நடிகர் அஜித் குமார் தரப்பில், இந்த மரியாதை எனக்கு மட்டுமானதல்ல. என்னை ஆதரித்த அனைவருக்குமானது. இந்த தருணத்தை பார்க்க என் தந்தை இருந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நிச்சயம் என் தந்தை பெருமை கொள்வார். எண்ணற்ற தியாகங்களை செய்து வரும் அம்மாவுக்கும், 25 ஆண்டுகளாக துணையாக இருக்கும் மனைவி ஷாலினிக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் தரப்பிலும், பிரபலங்கள், அரசியல்வாதிகள் தரப்பினும் அஜித் குமாருக்கு வாழ்த்து கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின், நடிகர் அஜித் குமாருக்கு விருது அளிக்கப்பட்டது சில விமர்சனங்களை பெற்றுள்ளது. இதில் மத்திய அரசு அரசியல் செய்திருப்பதாகவும் சில பதிவுகள் வெளியாகியது.

இந்த நிலையில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குஷ்பு பேசுகையில், நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, சோபனா உள்ளிட்டோருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகாவில் ஆனந்த் நாக் சாருக்கும், ஆந்திராவில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாத் துறையில் உள்ள பலருக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் அரசியல் ரீதியாக பார்க்காமல், நியாயமாக தேர்வு செய்து விருது அளித்துள்ளார்கள். இது எங்களுக்கு பெருமையாக உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து அஜித் குமாருக்கு விருது அளிக்கப்பட்டதற்கு பின் அரசியல் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு குஷ்பு, 1+1 எப்போதும் 2 தான். அது 11 ஆகாது. நீங்களை 11ஆக மாற்ற நினைக்காதீர்கள். நீங்கள் அரசியலாக பார்த்தால் என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்தார். ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட்டிருந்த போது, இதேபோல் நடிகர் ரஜினிகாந்த்-க்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+