இவரா வேட்பாளர்? சசிகலா புஷ்பாவை சீண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட பாலகணபதிக்கு சீட்.. வெடித்தது சர்ச்சை!
சென்னை: பாஜக திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக பொன்.பாலகணபதி நிறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவை கூட்டத்தில் சீண்டியதாக புகாருக்கு உள்ளான பாலகணபதிக்கு பாஜக சீட் கொடுத்துள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

பாஜக வேட்பாளர்கள்: பாஜக தமிழ்நாடு + புதுச்சேரியில் 20 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் பாமகவுக்கும், 3 தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸுக்கும், 2 தொகுதிகள் அமமுகவுக்கும், ஒரு தொகுதி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கும் (ஓபிஎஸ் அணி) ஒதுக்கப்பட்டுள்ளது. ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ், பாரிவேந்தர் பச்சைமுத்து, ஏசி சண்முகம் ஆகியோர் தலா ஒவ்வொரு தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன் தினம் மற்றும் நேற்று என 2 கட்டங்களாக வெளியிடப்பட்டது. திருவள்ளூர் (தனி) தொகுதியின் பாஜக வேட்பாளராக பொன் பாலகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் நல்லதம்பி, திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடுகிறார்.
திருவள்ளூர் வேட்பாளர் பாலகணபதி: திருவள்ளூர் தொகுதியில் பால கணபதிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலகணபதி, முன்னாள் எம்.பி.யும், பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவை பொதுவெளியில் பாலியல் ரீதியில் சீண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் அப்போது வெளியாகி பரவியது.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தினர். அப்போது, முன்னாள் எம்.பியும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தபோது, அவருக்கு அருகில் இருந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன். பால கணபதி கூட்ட நெரிசலில் சசிகலா புஷ்பாவை தவறான வகையில் தொடுவது போல வீடியோ வெளியானது.
சசிகலா புஷ்பாவை தவறாக சீண்டியதாக குற்றச்சாட்டு: சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தியபோது, அவருக்கு வெகு அருகில் நின்றார் பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி. அவர் முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் சில செய்கைகளில் ஈடுபட்டதாகவும் பாலகணபதி கையை சசிகலா புஷ்பா சங்கடத்துடன் தட்டி விடுவது போலவும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.
முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவை, பாஜக நிர்வாகி பால கணபதி சீண்டுவதாக கூறி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியிடம் புகார் தெரிவித்திருந்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் தரக் கோரி தேசிய மகளிர் ஆணையம் பால கணபதிக்கு நோடீஸ் அனுப்பியது.
மச்சான் கம்யூனிஸ்ட் எம்.பி.. மாமா, அப்பா முன்னாள் எம்.பிக்கள்.. யார் இந்த பாஜக வேட்பாளர் SGM ரமேஷ்?
இவரா திருவள்ளூர் வேட்பாளர்?: இந்த நிலையில் தான், திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளராக பொன்.பாலகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். பாலியல் சீண்டல் சர்ச்சையில் சிக்கிய பாலகணபதிக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
வேட்பாளர் அறிமுகம்.. 🥸
— Aspin C. S. Kiruba (@KirubaAspin) March 22, 2024
மேற்கண்ட வீடியோவில் இருப்பவர்தான் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன். பால கணபதி. pic.twitter.com/G3tZnX0uVR
மாற்றப்படுவாரா?: முன்னதாக, நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவர் தொடர்பான பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. அதில் பட்டியலினத்தவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சாதி ரீதியாக பேசி இருந்தார் சூரியமூர்த்தி. இதையடுத்து நாமக்கல் வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சசிகலா புஷ்பாவுக்கு பாலியல் சீண்டல்.. 'நேர்ல வாங்க!' பொன்.பாலகணபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
இந்நிலையில், கட்சியில் இருக்கும் சக நிர்வாகியான முன்னாள் எம்.பியை அதுவும் பொதுவெளியிலேயே பாலியல் சீண்டல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையில் சிக்கிய பொன். பாலகணபதி, திருவள்ளூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications