சசிகலா புஷ்பாவுக்கு பாலியல் சீண்டல்.. 'நேர்ல வாங்க!' பொன்.பாலகணபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
சென்னை : முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவிடம் பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி அநாகரீகமாக நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பொன்.பாலகணபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவிடம் பொது இடத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி அநாகரீகமாக நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொது நிகழ்ச்சியில், பாஜகவின் பொன்.பாலகணபதி, முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.
இந்நிலையில், பொன்.பாலகணபதி நேரில் ஆஜராகி, எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பரமக்குடியில் திரண்ட அரசியல் கட்சியினர்
தியாகி இமானுவேல் சேகரனின் 65வது நினைவு நாள் கடந்த செப்., 11ஆம் தேதி அனுசகரிக்கப்பட்டது. இதனையொட்டி பரமக்குடியில் இருக்கும் இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து இமானுவேல் சேகரன் நினைவைப் போற்றினர்.

பாஜக சார்பில்
பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினாா் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாநிலச் செயலாளா் அஸ்வத்தாமன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது கூட்டம் அலைமோதியதால், அந்த இடத்தில் நெரிசலாக இருந்தது. இந்தக் கூட்டத்துக்கு நடுவே முன்னாள் எம்.பியும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தினார்.

ஆபாச செய்கை
சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தியபோது, அவரை உரசிக்கொண்டு நின்றார் பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி. அவர் முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் சில செய்கைகளில் ஈடுபட்டார். பொதுவெளியில் தியாகிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பொன்.பாலகணபதி, சசிகலா புஷ்பாவை நெருங்கி நின்று அவர் மீது தவறான நோக்கத்தோடு தொட முயன்றார். இதனால், சங்கடம் ஏற்பட்டாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார் சசிகலா புஷ்பா.

பாலியல் சீண்டல்
பொன்.பாலகணபதியின் முகம் சுழிக்க வைக்கும் இந்தச் செயலை வீடியோவாக பதிவு செய்த சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தீயாகப் பரவியது. அதனைப் பார்த்த பலரும் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். முன்னாள் எம்.பி மீதான பாஜக நிர்வாகியின் பாலியல் சீண்டல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மகளிர் ஆணையம் நோட்டீஸ்
இந்நிலையில், சசிகலா புஷ்பாவிடம் பொது இடத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி அநாகரீகமாக நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டில் நேரில் வந்து ஆஜராகி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு பொன்.பாலகணபதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேசிய மகளிர் ஆணையம்.
-
அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்











Click it and Unblock the Notifications