தேசியக்கொடியை அவமதித்த கும்பல் தான் அதை ஏற்ற சொல்கிறது.. பாஜகவை கடுமையாக விமர்சித்த டிஆர்பி ராஜா
சென்னை: தேசியக்கொடி பொருத்திய பிடிஆர் கார் மீது காலணி வீசப்பட்ட நிலையில், ‛‛தேசியக்கொடியை அவமதித்த கும்பல் தான் அதை ஏற்ற சொல்கிறது'' என பாஜக கட்சியை திமுகவின் ஐடி விங்க் செயலாளரும் எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணனும் வீரமரணம் அடைந்தார்.
இவரது உடல் காஷ்மீரில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக இன்று மதியம் அவரது உடல் மதுரை விமான நிலையத்தில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

காலணி வீச்சு- பாஜகவினர் கைது
இந்த வேளையில் மரியாதை செலுத்தும் விவகாரத்தில் பாஜகவினருக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கு இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதையடுத்து பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசப்பட்டது. இது பெரும் பிரச்சனையாக உருவானது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியதாக மதுரை அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

டிஆர்பி ராஜா விமர்சனம்
மேலும் பாஜகவினரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பாஜகவினரை கடுமையாக கண்டித்துள்ளனர். இந்நிலையில் தான் திமுகவின் எம்எல்ஏவும், ஐடி பிரிவு செயலாளருமான டிஆர்பி ராஜா விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

கூறியது என்ன?
‛‛மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசின் அமைச்சர் செல்லும் தேசியக் கொடி பொருந்திய கார் மீது தாக்குதல் நடத்தி நமது கொடியை அவமதிக்கும் இந்த கீழ்தரமான கும்பல் தான் இன்று வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற சொல்கிறது" என டிஆர்பி ராஜா விமர்சனம் செய்து உள்ளார்.
Recommended Video

பிடிஆர் பதில் என்ன?
முன்னதாக இந்த சம்பவம் குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ‛‛பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகியை அடக்கம் செய்வது குறித்து இரண்டு நாட்களாக ராணுவத்தினரை தொடர்புகொண்டு கேட்டறிந்தேன். தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பற்றி பேசுவதற்கான சரியான தருணம் இது இல்லை. பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை. பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும். பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன்'' என தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications