சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மசூத் அசாரை விடுவித்ததே பாஜகதான்.. ராணுவ வீரர்களை அரசு காக்கவில்லை.. ராகுல் பரபர குற்றச்சாட்டு!

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாரை விடுதலை செய்ததே பாஜக அரசுதான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாரை விடுதலை செய்ததே பாஜக அரசுதான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

தமிழகம் வந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். காலையில் அவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பேசியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதன்பின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி இதில் பேசினார்.

"நமக்கு நாமே" ஸ்டாலின் ஸ்டைல்.. தொள தொள ஜிப்பாவுக்கு பதில் ஃபிட்டான டி சர்ட்டில் "மிஸ்டர் ஹேண்ட்சம்"

ராகுல் பேட்டி

ராகுல் பேட்டி

சென்னையில் பேட்டியளித்த ராகுல் காந்தி, தேர்தலுக்காக தமிழகம் உட்பட பல தொகுதிகளில் காங். கூட்டணியை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் போதிய கூட்டணிகளை ஏற்படுத்தவில்லை என்பது பொய்யானது. பீகார், ஜம்முவில் நாங்கள் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். பாஜகவுக்குதான் போதிய கூட்டணிகள் அமையவில்லை.

நோக்கம் என்ன

நோக்கம் என்ன

சமூக நல்லிணக்கம் எங்களின் நோக்கம். பொருளாதார வளர்ச்சி குறைவது மக்களின் கோபத்தை உணர்த்துகிறது. பாஜக இதை புரிந்துகொள்வதில்லை. பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் நாடு முன்னேற்றம் அடையும்.

ஜிஎஸ்டி சட்டம்

ஜிஎஸ்டி சட்டம்

நாங்கள் ஜிஎஸ்டியில் நிறைய மாற்றங்களை செய்ய போகிறோம். ஜிஎஸ்டியால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதை நாங்கள் மாற்றுவோம். ஜிஎஸ்டி மாற்றம் மூலம் வரிகள் குறையும், நிறைய பலன் கிடைக்கும்

புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதல்

புல்வாமாவில் 45 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அரசு இவர்களை காப்பதற்காக எதுவும் செய்யவில்லை. பாகிஸ்தான் இவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க அரசு என்ன செய்தது. நமது பாதுகாப்பு வீரர்களை அரசு கைவிட்டுவிட்டது.

மசூத் அசார்

மசூத் அசார்

மசூத் அசாத்தை விடுதலை செய்தது பாஜகதான். பாஜகதான் இதை விளக்க வேண்டும்: ஏன் மசூதை விடுதலை செய்தார்கள் என்று, ஆலோசகர் அஜித் தோவல் இவர்களுடன்தான் இருந்தார் என்பதை மறக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
BJP is the one who released Masood Azad says Rahul Gandhi in Chennai Press Meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X