சனி பெயர்ச்சி "உளரல்கள்".. எஸ்.வி சேகர் போட்ட ஒரு ட்வீட்..என்னென்ன "எதிர்வினை" பாயும் ஆதரவாளர்கள்
சனி பெயர்ச்சி தன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது என்று எஸ்.வி சேகர் பதிவிட்ட ஒரு ட்வீட் அவருக்கே பூமராங் ஆகியுள்ளது.
சென்னை: சனி பெயர்ச்சி நிகழ்ந்துள்ள நிலையில் அதன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார் இனி அகந்தையான உளரல்கள் தொடரும் என்று எஸ்.வி. சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எஸ்.வி.சேகரின் பதிவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தான் ஒரு தலைவர் மற்றவர்கள் போல இட்லி சுட வரவில்லை. மேனேஜர் வேலை பார்க்க வரவில்லை என்று பேட்டி அளித்தார் பாஜகவின் அண்ணாமலை. தலைவர் எடுக்கும் முடிவுகள் பிடிக்காதவர்கள் வெளியேறத்தான் செய்வார்கள் என்றும் கூறினார். கருணாநிதி போல ஜெயலலிதா போல தானும் ஒரு தலைவர் என்று குறிப்பிட்டார் அண்ணாமலை.
பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற நாளில் இருந்து பல முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். சில தலைவர்களுக்கு பல்வேறு பதவிகள் அளிக்கப்பட்டு கட்சியை விட்டு வெளியேற்றப்படுகின்றனர். சில நாட்களாகவே பாஜகவில் இருந்து வெளியேறிய பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணாமலையின் பேட்டி குறித்து பெயர் குறிப்பிடாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எஸ்.வி சேகர்.

சனி பெயர்ச்சிக்கு முன்பே வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டார். இனி அகந்தையான உளரல்கள் தொடரும் என்று பதிவிட்டுள்ளார் எஸ்.வி. சேகர். அவரது பதிவிற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

வாயில் வாஸ்து சரியில்லாத நபர் பாட ஆரம்பித்து விட்டார். அப்போ ஆரம்பித்த மணல் கயிறு திரிப்பு இன்னும் முடியலை போல. என்ன பண்றது அரசியலில் கூட துபாய் னு நினைத்து கொச்சியில் இறங்கிய ஷேக்கு. கஜாவைத்தேடிக்கொண்டிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

சனீஸ்வரன் மராத்திய மண்ணில் சுபகிரகம்.
ஹனுமனை வழிபட்டால் சரியாகிவிடும்
கவலை வேண்டாம் ,
சனிஷிங்ய்ப்பூர் சனி பகவான் திருடர்களின் சிம்ஹ சொப்பனம்
தோரோகிகளிடம் இருந்து நம் தலைவரை காக்க பிராத்தனை செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலையின் ஆதரவாளர் ஒருவர்.

சனி பகவான் .. இன்டர்நேஷனல்.. !
.. அவரை ஏன் மாநில அரசியலுக்குள் ..
இழுக்கின்றீர்கள் .. ?!
.. போகட்டும்...
.. இத்தனைக்கும்... சனியார் ..
தமிழ் கடவுளா ..?! என்று கேட்டுள்ளார் ஒருவர்.

ஐயா அவருக்கு கேது உச்சம்னு எதுலயோ படிச்ச ஞாபகம். நேர்மையா யாரையும் கெடுக்காம இருக்கவங்கள சனி ஒன்னும் பண்ணாது. மேலும் தன்ன சுத்தி உள்ள வங்களையும் நேர்மையா இருக்க போராடுறவங்கள அந்த சனி பகவானே வளர்ச்சியின் உச்சிக்கு தான் கொண்டு போவார். அதுக்கும் மேல நல்ல உள்ளங்களின் ஆசியும் இருக்கு என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை ஆதரவாளர் ஒருவர்.

எப்படி போன சனிப் பெயர்சியில தப்பா ஒரு பேஸ்புக் forward போட்டீங்களே அது மாதிரியா ! தனக்கு வந்தா தக்காளி சட்னி, அடுத்தவன் பேசும் போது கமெண்ட் அடிக்கும்போது மட்டும் சனி தொடருமா.ஏன் சார், நீங்களும் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் ஒரு பாஜக தொண்டர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!












Click it and Unblock the Notifications