அசிங்கம்! பாஜக பிரமுகரின் “லீலைகள்” - பல பெண்களிடம் ஆபாச படமெடுத்து பணம் பறிப்பு - திருச்சியில் கைது
சென்னை: நடிகை உட்பட பல பெண்களிடம் ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த புகாரின் பேரில் பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் ஜெயராம் பாண்டியன். பாஜகவை சேர்ந்த இவர் மீது சென்னை வளசரவாக்கம் ஒய்.எம்.ஜி.பாபு தெருவை சேர்ந்த ராம்குமார் என்ற திரைப்பட இயக்குநர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பெண்ணை ஆபாசப் படம் எடுத்து மிரட்டுவதாக புகார் அளித்து இருக்கிறார்.
இவர் காவல் நிலையத்தில் அளித்து இருக்கும் புகாரில், "நான் திரைப்பட இயக்குநராக உள்ளேன். இளம் நடிகர்களை நடிக்க வைப்பதற்காக திரைப்பட்டறை என்ற பெயரில் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறேன். இந்த நிலையில் மைதிலி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர் சாலை விபத்தில் கணவரை இழந்தவர்.

கடந்த 7 ஆண்டுகளாக நானும் அவரும் ஒன்றாக வசித்து வந்து உள்ளேன். இவர் இதற்கு முன்பாக தனது குடும்ப நண்பரான பாஜக பிரமுகர் ஜெயராம் பாண்டியன் என்பவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அதை காட்டி மிரட்டி வருவதுடன் செல்போன் மூலமாக ஆபாசமாக பேசி தொந்தரவு வழங்கி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என தெரிவித்து உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள். இதனை அறிந்துகொண்ட பாஜக பிரமுகர் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான பாஜக பிரமுகர் ஜெயராம் பாண்டியனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஜெயராம் பாண்டியன் திருச்சியில் பதுங்கி இருந்ததாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அவர் பதுங்கி இருந்த பகுதிக்கு சென்ற போலீசார் ஜெயராம் பாண்டியனை கைது செய்தனர். அதை தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அப்போது அவர் தன்னை பாஜக பிரமுகர் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார். கூடுதல் விசாரணையில் மைதிலி மட்டுமின்றி மேலும் பல பெண்களையும் ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறித்தது அம்பலமாகி உள்ளது.
அத்துடன் மைதிலியிடமும் அவர் பணம் கேட்டு ஆபாசமாக பேசி மிரட்டியதும் தெரியவந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஜெயராம் பாண்டியன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications