சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்.. சபாஷ் கமல்..!

Google Oneindia Tamil News

Recommended Video

    lok sabha election results 2019: கோவை, திருப்பூர், பொள்ளாச்சி வாக்கு எண்ணிக்கை நிலவரம்- வீடியோ

    சென்னை:தமிழகத்தில் பாஜக வெற்றி என்று கணிக்கப்பட்ட கோவை தொகுதியில் அதன் வெற்றியை புதிய அரசியல் குழந்தையான கமலின் மநீம தட்டி பறித்திருக்கிறது.

    மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி தான் தேர்தல் முடிவுகள் சொல்லி இருக்கின்றன. கருத்துக் கணிப்புகளில் சொன்னபடியே 300க்கும் அதிகமான தொகுதிகளில் சொல்லி அடித்த படி பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இனி ஆட்சி அமைப்பது... கட்சியினருடன் ஆலோசனை என்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மத்தியில் தொடரும்.

    தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி, மோடி அலை வீசுகிறது என்ற பிரச்சார களத்தில் பேசப்பட்டாலும்.. வெற்றியை திமுக கூட்டணிக்கு மக்கள் வழங்கி இருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் மத்தியில் அறுதி பெரும்பான்மை பெற்ற பாஜகவால் தமிழகத்தில் கணக்கை தொடங்க முடியவில்லை.

    விஸ்வரூபம் எடுத்த விஸ்வரூபம் எடுத்த "மய்யம்" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி

    பாஜகவுக்கு 5 தொகுதிகள்

    பாஜகவுக்கு 5 தொகுதிகள்

    தமிழகத்தில் மொத்தம் 5 தொகுதிகளில் தான் பாஜக நேரிடையாக போட்டியிட்டது. மற்றவை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த 5 தொகுதிகளில் பாஜகவுக்கு கிடைத்தது என்னவோ தோல்வி. வெற்றி நிச்சயம் என்று பாஜகவால் கணிக்கப்பட்ட கோவை தொகுதியில் தோல்வி கிடைத்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

    அரசியல் குழந்தை மநீம

    அரசியல் குழந்தை மநீம

    அந்த அதிர்ச்சியை பாஜகவுக்கு அளித்திருப்பது புதிய அரசியல் குழந்தையான கமலின் மக்கள் நீதி மய்யம். கோவையில் பாஜக வேட்பாளராக களம் கண்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் சி.பி. ராதாகிருஷ்ணன். சொந்த கட்சியின் பலம், சாதி அரசியல், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் அபார ஆதரவு என்ற முக்கோண கணக்கில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்.

    பாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன? வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்'பாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன? வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்'

    மண்ணை போட்ட மநீம

    மண்ணை போட்ட மநீம

    ஆனால்.. அந்த எண்ணத்தில் கிட்டத்தட்ட ஒரு கைப்பிடி மண்ணை அல்ல.. ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டியிருக்கிறது மநீம. இந்த தொகுதியில் மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன் கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகளை கடந்து விட்டார். வெற்றி அவருக்கு என்பது உறுதியாகி விட்டது.

    தோல்வியில் பாஜக

    தோல்வியில் பாஜக

    அவருக்கு அடுத்தபடியாக, பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகளை கடந்துவிட்டார். ஆனால்... தோல்வி உறுதியாகி விட்டது. அவரது வாக்குகளை பிரித்தது யார் என்று கணக்கு போட்டு பார்த்தால் விடை மநீம என்று வருகிறது.

    செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!

    மநீம அபார வாக்குகள்

    மநீம அபார வாக்குகள்

    அதாவது அந்த தொகுதியில் மநீம வேட்பாளரும், அக்கட்சியின் துணை தலைவருமான மகேந்திரன் பெற்றிருக்கும் வாக்குகள் ஒன்றே கால் லட்சத்தை தாண்டியிருக்கின்றன. கிட்டத்தட்ட பாஜக வாங்கிய ஓட்டுகளில் சரி பாதி... மா.கம்யூ வாங்கிய வாக்குகளில் 4ல் ஒரு பங்கு.

    அதிர்ச்சியில் பாஜக

    அதிர்ச்சியில் பாஜக

    அதிமுகவுடன் பாஜக தேர்தல் கூட்டணி அமைந்த போது கோவையில் பாஜக எளிதாக வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டது. கள நிலவரங்களும் அப்போது அப்படித்தான் கட்டியம் கூறின. ஆனால்... முடிவுகள் அதற்கு நேர்மாறாக உள்ளதால் பாஜக தமிழக தலைமை செமத்தியாக அதிர்ந்து போயிருக்கிறது.

    செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

    அமைச்சர் பதவி இல்லை

    அமைச்சர் பதவி இல்லை

    ஏன் என்றால் இந்த தொகுதியில் வென்றால் தமிழகத்துக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். இப்போதைக்கு அது இல்லை என்பது மெய்யாகி இருக்கிறது. சரியான கூட்டணி, சரியான வேட்பாளர் என்று இருந்தாலும், புதிய வரவான மக்கள் நீதி மய்யத்தால் கோவையில் பாஜகவின் வெற்றி பறிக்கப்பட்டிருக்கிறது.

    English summary
    Bjp loses its victory in Coimbatore lok sabha constituency because of Makkal Needhi Maiam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X