கலாச்சார சீர்கேட்டின் உச்சத்தில் சென்னை.. விதிகளை மீறி பப் செயல்படுவது யார் குற்றம்? கொதிக்கும் பாஜக
சென்னை: கலாச்சார சீர்கேட்டின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது சென்னை மாநகரம் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒரு பாரில் அனுமதியை மீறி விடிய விடிய பார்ட்டி நடந்த நிலையில் அங்கு போலீசார் திடீர் ரெய்டு சென்றதால் அவர்களை பார்த்ததும், மது போதையில் ஆடிக் கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் அங்கிருந்து வெளியேறினர். அப்போது பத்திரிகை கேமராமேன்கள் படம் எடுத்ததால் பெண்கள் முகத்தை மூடியபடி சென்றனர். சிலர் பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கலாச்சார சீர்கேட்டின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது சென்னை மாநகரம். இதற்கு காரணம் யார்? என்ன? ஏன்? என்று ஆராய்வதற்கு முன் நம் முன்னே உள்ள கேள்விகள் பல. ஆண் மதுவுக்கு அடிமையானாலும், பெண் மதுவுக்கு அடிமையானாலும் குடும்பத்திற்கே கேடு. பெண்கள் 'Pub' க்கு செல்லக்கூடாதா? சட்டம் தடுக்கிறதா?
விதிகளை மீறி நேரம் கடந்து 'Pub' ஐ திறந்து வைத்தது யார் குற்றம்? வாடிக்கையாளர்கள் மீதா? மதுக் கூடத்தின் உரிமையாளர் மீதா? அல்லது தினந்தோறும் இந்த மதுக்கூடம் விதிகளை மீறி இயங்குவதை கண்டும் காணாமல் இருந்த காவல்துறையின் மீதா? ஊடகத்தை சார்ந்த ஒளிப்பதிவாளர்கள் பெண்களை பின்தொடர்ந்து ஒளிப்பதிவு செய்ய காரணம் என்ன? இது தனி மனித உரிமையை பாதிக்காதா? அவர்களை துரத்தி துரத்தி படம் பிடிப்பது அவமானப்படுத்துவது ஆகாதா? அவதூறு ஆகாதா? அப்படியே படம் பிடித்திருந்தாலும் அதை ஒளிபரப்புவது சட்டத்திற்கு உட்பட்டதா? ஊடக சுதந்திரம் என்பது இது தானா? அரைகுறை ஆடையில் ஓட்டம் என்று பதிவிடுவது முறையா?
இந்த பார்களை இயக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பார்கள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். இது போன்ற பார்களுக்கு இனி அனுமதி இல்லை என்று அரசு அறிவிக்க வேண்டும். பெண்களை குறிவைத்து செய்தி வெளியிடுபவர்கள் இனி பெண்களுக்கு பார்களில் அனுமதியளிக்க கூடாது என்று கோரிக்கை விடுப்பார்களா? சட்டம் அதை அனுமதிக்குமா? இது போன்ற செய்திகள் பெண்களை மையப்படுத்தி பரபரப்பை உருவாக்கும் தவிர கலாசார சீர்கேட்டுக்கான தீர்வு அல்ல. பொறுப்பில்லாமல் நடந்து கொள்பவர்களை திருத்த முயல வேண்டுமே தவிர, அழிக்க முயல்வது ஆபத்து என்பதை ஊடகங்கள் உணர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications