Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசி சோறு.. "பிரதர், அரை டம்ளர் சாராயம்"..திராணியற்ற திமுக.. வீரமணிதான் வெட்கப்படணும்.. எகிறும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் வருமானத்தை அதிகரித்து இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் உருவாக காரணமாக விளங்கி கொண்டிருக்கிறவர்களுக்கு வெண்சாமரம் வீசுவதற்கு கி.வீரமணி போன்றவர்கள் வெட்கப்பட வேண்டும். சமூக நீதி காத்தோம் என்று 50 வருடங்களாக மார் தட்டி கொண்டு, சாதி அரசியலில் ஊறித்திளைத்து போன தமிழகத்தில், வால் பிடித்த குடும்ப உறுப்பினராலேயே ஓசி சோறு என்று பட்டம் பெற்ற கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும் என்று பாஜகவின் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டையில் திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது..

இந்த கூட்டத்தில், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணி பேசும்போது, வழக்கம்போல், பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

 பிரதர்

பிரதர்

"கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருந்தது. நாங்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ந்து போராடி அகற்றினோம். அதற்கு சற்றுத் தள்ளி போய் பார்த்தால், டாஸ்மாக் மதுபானக் கடை இருக்கும். ஆனால், அங்கு ஒற்றைக் குவளை தான். கொஞ்சம் சாராயம்(மது) உள்ளே போனதும் அருகில் இருப்பவரை பார்த்து 'பிரதர்' என்று தான் சொல்கிறான். அதுவும் ஆங்கிலத்தில். அப்போது சாதி எங்கே போனது. நாங்கள் 50 ஆண்டுகளாக சாதிக்காததை அரை டம்ளர் சாராயம் சாதிக்கிறது. இதற்கு வெட்கப்பட வேண்டாமா? பெண்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000 தமிழக அரசு வழங்குகிறது.

 சாதனைக்களம்

சாதனைக்களம்

அடுத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. திராவிட மாடல் சாதனைக் களத்தில், சமுதாய புரட்சிதான் தலையாய புரட்சி. அந்த சமுதாய புரட்சியை செய்ய நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் சனாதனவாதிகள், சாதி வெறியர்கள், மத வெறியர்கள் ஆட்சிக்கு வராமல் இருக்க நாம் தயாராக வேண்டும். சமத்துவத்தை ஏற்படுத்த கூடிய ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி நீடித்தால்தான் நமக்கு விடியல் கிடைக்கும்" என்று பேசியிருந்தார் வீரமணி..

 தயிர் பக்கெட்

தயிர் பக்கெட்

முன்னதாக, காரைக்காலில் செய்தியாளர்களிடம் கி.வீரமணி பேசியபோது, "இந்தி மொழியை திணிக்க மாட்டோம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தையை அச்சிட வேண்டும் என உத்தரவிடுகின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. எவ்வளவு வேகமாக அவர்கள் இந்தியை திணிக்கிறார்களோ, அவ்வளவு வேகமாக அவர்கள் ஆட்சிக்கு குழி தோண்டிக் கொள்கிறார்கள் என்று பொருள்" என்று விமர்சித்திருந்தார். மூத்த தலைவர் கி.வீரமணியின் இந்த பேச்சுக்குதான் தமிழக பாஜக எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.. சாதி அரசியலில் ஊறித்திளைத்து போன தமிழகத்தில், வால் பிடித்த குடும்ப உறுப்பினராலேயே ஓசி சோறு என்று பட்டம் பெற்ற கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும் என்று, தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்..

சாராயம்

சாராயம்

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருந்தது. நாங்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ந்து போராடி அகற்றினோம். அதற்கு சற்றுத் தள்ளி போய் பார்த்தால், டாஸ்மாக் மதுபானக் கடை இருக்கும். ஆனால், அங்கு ஒற்றைக் குவளை தான். கொஞ்சம் சாராயம் (மது) உள்ளே போனதும் அருகில் இருப்பவரை பார்த்து பிரதர் என்று தான் சொல்கிறான். அதுவும் ஆங்கிலத்தில். அப்போது சாதி எங்கே போனது. நாங்கள் 50 ஆண்டுகளாக சாதிக்காததை அரை டம்ளர் சாராயம் சாதிக்கிறது. இதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று கி.வீரமணி பேசியிருந்தார். வெட்கப்பட வேண்டியது கி.வீரமணி தான்.

 புளகாங்கிதம்

புளகாங்கிதம்

அரும்பாடுபட்டு சாராய சாம்ராஜ்யத்தையும், சாராய ரௌடிகளையும் அடக்கி, ஒடுக்கி மது விலக்கை அமல்படுத்தி, தமிழகத்தை நேர் பாதையில் ராஜாஜி நிறுத்திய நிலையில், 1971 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது சாராய ஆற்றை தமிழகத்தில் ஓடச் செய்து புளகாங்கிதம் அடைந்த கும்பலை ஆதரித்து கொண்டிருப்பதற்கு வெட்கப்பட வேண்டியது வீரமணி தான். சாராயம் போயிற்றே, வருமானம் எங்கிருந்து வரும்? என்ற கேள்விக்கு பணம் படைத்தவர்களிடம் வரி விதித்து, ஏழை எளியவர்களை காப்பதே அரசின் கடமை என்று சொல்லி மது விலக்கை அமல்படுத்தினார் ராஜாஜி.

 ஆதிக்க சக்தி

ஆதிக்க சக்தி

ஆனால் அந்த பணம் படைத்தவர்களுக்கு விதித்த வரியில் சமரசம் செய்து கொண்டு, ஊழல்கள் பல செய்து, டாஸ்மாக் வருமானத்தை அதிகரித்து இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் உருவாக காரணமாக விளங்கி கொண்டிருக்கிறவர்களுக்கு வெண்சாமரம் வீசுவதற்கு வீரமணி போன்றவர்கள் வெட்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதிலும் தீண்டாமைக்கு எதிராக 1920 லேயே குரல் கொடுத்தவர் ராஜாஜி. ராஜாஜி ஆட்சி காலத்தில் தான் ஆதிக்க சக்திகளால் அடக்கி வைக்கப்பட்டிருந்த பட்டியிலன மக்களை கோவில்களுக்குள் செல்ல சட்டமியற்றப்பட்டது என்பதை அறிந்தும், இன்று வரை ராஜாஜியின் சாதியை குறிப்பிட்டு இழித்தும், பழித்தும் பேசிவருவதற்கு வெட்கப்பட வேண்டியது கி.வீரமணி போன்றவர்கள் தான்.

 வாய்மூடி மௌனி

வாய்மூடி மௌனி

கீழவெண்மணி விவகாரத்தில் வாய் மூடி மௌனியாக இருந்து, பணம் படைத்தவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும், மாதங்கள் பல ஆகியும் இன்று வரை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூர அரக்கர்களை கைது செய்ய திராணியற்று இருக்கும் கழக அரசை பாராட்டி கொண்டிருக்கும் கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும். சமூக நீதி காத்தோம் என்று 50 வருடங்களாக மார் தட்டி கொண்டு, சாதி அரசியலில் ஊறித்திளைத்து போன தமிழகத்தில், வால் பிடித்த குடும்ப உறுப்பினராலேயே ஓசி சோறு என்று பட்டம் பெற்ற கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும் என்று காட்டமாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார் நாராயணன் திருப்பதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+