Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன்மோகன் சிங் கூறினால் சரி! ரவி கூறினால் தவறா.. ஸ்டெர்லைட் விவகாரம்! ஆளுநருக்கு ஆதரவாக வந்த நாராயணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் ரவி கூறிய கருத்துகள் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக பாஜகவின் நாராயணன் திருப்பதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது இதில், இந்தியக் குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ரவி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிகள் ஆளுநர் கூறிய சில கருத்துகள் தான் சர்ச்சையானது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தமானதுதான் என்று கூறிய ஆளுநர் ரவி, இருப்பினும், வெளிநாட்டின் நிதியைப் பயன்படுத்தி மக்களைப் போராட்டம் செய்யத் தூண்டிவிட்டு ஆலையை மூடிவிட்டனர் என்றும் நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்து வந்தது என்றும் பேசியிருந்தார்.

BJP Narayanan Thirupathy support of governor Ravi on his thoothukudi sterlite protest

போராட்டம்: மேலும், நிலுவையில் இருக்கும் சட்ட மசோதாக்கள் குறித்தும் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார். இது மிக பெரியளவில் சர்ச்சையானது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்,

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆளுநரைக் கண்டித்து வரும் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மட்டுமின்றி அதிமுகவும் ஆளுநர் பேச்சைக் கண்டித்துள்ளது. ஆளுநர் கூறிய கருத்து வேதனை அளிக்கிறது என்றும் உயர்ந்த பதவியில் இருப்போர் பொது இடங்களில் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது அழகல்ல என்றும் அதிமுகவின் கே.பி.முனுசாமியும் கூறிருந்தார்.

'குய்யோ முறையோ' கதறல்: இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு ஆதரவாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று தமிழக ஆளுநர், கூடங்குளம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நிதி மக்களைத் தூண்ட பயன்பட்டது என்று பேசியதற்காக திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் 'குய்யோ முறையோ' என்று கதறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் ஆளுநர் ஸ்டெர்லைட் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திவிட்டார் என்று குறிப்பிடுகிறார்களேயன்றி, கூடங்குளம் குறித்து அவர் பேசியதை மறைத்துவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் பேசியது தவறு என்று கண்டிக்கின்றனர் முதல்வர் மு.க. ஸ்டாலினும், மக்களவை உறுப்பினர் கனிமொழியும். திடீர் தமிழ் பாசம் வந்து துடிக்கிறது தமிழக காங்கிரஸ். பிப்ரவரி 24, 2012 அன்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், 'இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுக்கமுடியாமல் கூடங்குளத்தில் போராட்டம் செய்பவர்களை அமெரிக்க என்ஜிஓ-க்கள் நிதியளித்து தூண்டிவிடுகிறார்கள்' என்று கூறியதை மறந்துவிட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

BJP Narayanan Thirupathy support of governor Ravi on his thoothukudi sterlite protest

போராடியவர்கள் தேசத்துரோகிகளா: அதேபோல் திமுக தலைவர் கருணாநிதி, பிப்ரவரி, 29, 2012 அன்று 'கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்கத் தொண்டு நிறுவனங்கள்தான் காரணம், அதிமுக அரசு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது' என்று கூறியதையும் மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா? அப்படியென்றால், கூடங்குளத்தில் போராடியவர்களைத் தேசத்துரோகிகள் என்று சொல்கிறதா திமுக...

அமெரிக்க நிதியினால் தூண்டப்பட்டதால்தான் போராட்டம் நடைபெற்றது என்று ஏற்றுக்கொள்கிறாரா மு.க.ஸ்டாலின்... எதிர்க்கட்சியாக இருந்தால் போராட்டக்காரர்கள் தேச பக்தர்கள் என்றும், ஆளுங்கட்சியாக இருந்தால் போராட்டக்காரர்கள் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்துவது மலிவான அரசியல் மட்டுமல்ல ஆபத்தான அரசியலும்கூட... மன்மோகன் சிங் கூறினால் சரி, ஆர்.என்.ரவி கூறினால் தவறா... எந்த அடிப்படை ஆதாரத்தைக் கொண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் கூடங்குளம் போராட்டத்தைத் தூண்ட வெளிநாட்டு நிதிதான் பயன்பட்டது என்று கூறினார் என்பதை அன்று மத்திய அமைச்சரவையில் பங்கேற்றிருந்த திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+