100 நாளில் 10000 கொடி.. முதல் நாளே தப்பு கணக்கு காட்டிய நிர்வாகிகள்! அண்ணாமலைக்கு போன மேட்டர்.. திக்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தினமும் 100 கொடிக் கம்பம் என 100 நாட்களில் 10,000 கொடி ஏற்றப்படும் பாஜகவின் திட்டத்தில் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாம்.
சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலையின் வாடகை வீட்டில் அனுமதியின்றி பாஜக கொடி கம்பம் நட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கே அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக சென்ற அரசு ஊழியரை தாக்கிய புகாரில், பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அமர் பிரசாத் ரெட்டி சிறையில் உள்ள நிலையில், தனது வீட்டு முன்பு பாஜக கொடி கம்பம் நிறுவுவதை தடை செய்த தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் தினமும் 100 கொடிக் கம்பம் என100 நாட்களில் 10,000 கொடி ஏற்றப்படும் என சூளுரைத்திருந்தார் அண்ணாமலை. அதன்படி , நவம்பர் 1-ந்தேதி இந்த பணியை தொடங்கினர் தமிழ்நாடு பாஜகவினர்.
இதனால் பல இடங்களில் போலீசுக்கும், பாஜகவினருக்கும் மோதல் வெடித்தது. அனுமதியின்றி கொடி ஏற்றப்படுவதை தடுத்து நிறுத்தினர். தமிழ்நாட்டில் உள்ள பாஜக கோட்டப் பொறுப்பாளர்கள், தங்கள் கோட்டத்தில் எத்தனை இடங்களில் கொடி ஏற்றப்பட்டது, அதில் போலீஸ் தடுத்து எத்தனை ? என்றெல்லாம் அண்ணாமலைக்கு கணக்கு கொடுத்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 45 இடங்களில் கொடி ஏற்றப்பட்டது என சென்னை கோட்டப் பொறுப்பாளர் கரு.நாகராஜன் கணக்கு கொடுத்துள்ளார். ஆனால், இந்த பட்டியல் சரி அல்ல என அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்திடம் சென்னை பாஜகவினர் சிலர் ஆதாரப்பூர்வமாக புகார் கூறியுள்ளனர். அதாவது, சென்னையில் 45 இடங்களில் பாஜக கொடி ஏற்றப்பட்டதாக சொல்லப்பட்ட கணக்கில், 7 இடங்களில் ஏற்றப்பட்ட கொடி தான் புதியது.
மற்ற 38 இடங்களில் ஏற்றப்பட்ட கொடிகள், ஏற்கனவே ஏற்றப்பட்டவை. ஏற்கனவே கொடிக்கம்பம் இருக்கும் நிலையில், அதில் இருந்த பழைய கொடியை கழற்றிவிட்டு புதிய கொடியை ஏற்றியுள்ளனர். இதனை புதிதாக புதிய இடத்தில் கொடிக் கம்பம் நட்டு கொடி ஏற்றப்பட்டதாக கணக்குக் காட்டியிருக்கிறார்கள். அதனால் இது புதிய கொடிக் கம்பம் இல்லை.
அந்த வகையில் புதிதாக கொடிக் கம்பம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது 7 இடங்கள் மட்டுமே. அந்த 7 இடங்களிலும் அனுமதியின்று கொடிக் கம்பம் நட முயற்சிப்பதாக கூறி அதனை தடுத்து விட்டது போலீஸ். அதனால் அந்த 7 இடங்களிலும் கொடி ஏற்றப்படவில்லை " என்று கேசவ விநாயகத்திடம் புகார் வாசித்துள்ளனர் சென்னை பாஜகவினர்.
இந்த கணக்கு விவகாரம் தற்போது அண்ணாமலைக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். இந்த நிலையில், கொடி ஏற்றும் வைபத்தில் பாஜகவுக்கும் போலீசுக்கும் ஏற்படும் மோதல்களால் பாஜகவினர் மீது வழக்கு போட திமுக அரசு திட்டமிடுவதை அறிந்த கேசவ விநாயகம், "அனுமதியின்றி கொடி ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். முறையாக அனுமதி வாங்குங்கள். அனுமதி கிடைக்கவில்லை எனில் போராடுங்கள். அனுமதி பெற்று கொடி ஏற்றுங்கள். அதனால், இந்த விவகாரத்தில் உங்களின் வேகத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் " என்று தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் கேசவ விநாயகம்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications