அதிரடி காட்டும் அகிலேஷ்.. ஜெர்க்காகும் பாஜக.. "இது வேலைக்கு ஆகாது.." கையிலெடுத்த புது வியூகம்!
சென்னை: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது பாஜக.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த 5 மாநிலங்கலில் தற்போது நான்கு மாநிலங்களில் பாஜக-வும், பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலைப் பொருத்தவரை அங்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும். பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. உத்திரப்பிரதேச தேர்தலை நாடே உற்றுநோக்கி வருகின்றது.
உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் பா.ஜ.க பிரசாரத்தை துரிதப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி ஏற்கெனவே உத்திரப்பிரதேசத்தில் தனது பரப்புரையை தொடங்கிவிட்டார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தே மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

தேர்தல்
சட்டமன்ற தேர்தலைப் பொருத்தவரை முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சிம்மசொப்பனமாக இருப்பது சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். அகிலேஷின் அணுகுமுறை மக்களைக் கவர்ந்து வருகிறது. மாநிலம் முழுதும் சுழன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இளைஞர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அகிலேஷ் யாதவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கிறது.

காங்கிரஸ்
உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் முகமாக பிரியங்கா காந்தியே இருக்கிறார். ராகுல் பிரியங்கா என இருவரும் மாநிலம் முழுவதும் சுழன்று பிரசாரம் செய்கிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சி கடந்த காலங்களில் பலம் வாய்ந்த கட்சியாக உத்திரப்பிரதேசத்தில் இருந்தது. ஆனால், தற்போது அக்கட்சிக்கு பெரிய எதிர்காலம் இல்லை என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பாஜக
எதிர்கட்சிகளின் வியூகங்களை உடைத்து மீண்டும் ஆட்சியில் அமர உத்திரப்பிரதேச பாஜக திட்டமிட்டிருக்கிறது. இதையடுத்து, வீடு வீடாக சென்று பிரச்சாரத்தை தொடங்கும் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது பாஜக யோகியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி பிரசாரத்தைத் தொடங்குகின்றனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுயிலும் 'ஜன் விஸ்வாஸ் யாத்ரா'க்கள் மூலம் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லப்படும் என பி.ஜே.பி தெரிவித்துள்ளது.

கொரோனா
''கொரோனா நாடு முழுதும் அதிகரித்துவரும் நேரத்தில், தேர்தல் நடக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு பெரிய பெரிய கூட்டங்களை கட்சிகளே நிராகரித்து வருகின்றன. இதனால் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி வீடு வீடாக செல்லவிருக்கின்றனர். விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்த பணிகள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பார்கள்," என்று இத்திட்டம் குறித்து பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது.

வீடு வீடாக
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 1,74,351 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கிய 92,821 வாக்குச்சாவடி மையங்களின் கீழ் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய கட்சி விரும்புகிறது. பிரச்சாரத்தை வலுப்படுத்த, ஜனவரி 14-ம் தேதிக்குப் பிறகு பெரிய எல்.இ.டி திரைகளைக் கொண்ட ரதத்தைக் மாநிலம் முழுதும் பிரசாரம் செய்ய பயன்படுத்தவிருக்கிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள சட்டசபை தொகுதிகள் ஒவ்வொன்றையும் இந்த ரதங்கள் சென்றடையும் என்றும், அரசின் அனைத்து சமூக நலத்திட்டங்கள் மற்றும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மேம்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும். மேலும், பி.ஜே.பி-யைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இந்த பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று மாநில பாஜக தலைவர் கூறினார்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?












Click it and Unblock the Notifications