நேரடியாக வீதியில் இறங்கிய பாஜகவினர்! சென்னை அயோத்தியா மண்டப விவகாரத்தில் ஆர்ப்பாட்டம்.. என்ன நடந்தது
சென்னை: அயோத்தியா மண்டபத்தைத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் ஸ்ரீ ராம் சமாஜத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்த மண்டபத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாகத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அயோத்தியா மண்டபம்
இதை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் சிலைகள் நிறுவுதல் மற்றும் பூஜைகள் நடத்துவது தொடர்பாகவும், இந்த மண்டபம் பொதுக் கோயிலா இல்லையா என்பது தொடர்பாக ஸ்ரீ ராம் சமாஜத் தலைவர் ரிட் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி இதைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

வாதம்
இது கோயில் அல்ல என்றும், ஆகம சாஸ்திரப்படி பொதுமக்கள் வழிபடுவதற்காகச் சிலைகள் எதுவும் நிறுவப்படவில்லை என்றும் மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், ராமர், சீதை, அனுமன் ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றதாகவும் மனுதாரர் கூறினார். இருப்பினும், சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டதாகவும், பொதுமக்களிடமிருந்து காணிக்கை வசூலிக்கப்படுவதாலும் இது கோயில் என்றே அறநிலையத் துறை வாதிட்டது.

நீதிபதி உத்தரவு
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக முடிவு எடுக்க ரிட் மனு மூலம் விண்ணப்பிக்கக் கூடாது என்று அவர் கூறினார். மேலும், அறநிலையத்துறையின் நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட மன்றத்தின் முறையீடு செய்ய அனுமதி இருப்பதாகவும் நீதிபதி கூறினார். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அயோத்தியா கோயிலை அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாஜக ஆர்ப்பாட்டம்
இருப்பினும், இதை எதிர்த்து பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அயோத்தியா மண்டபம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பொது நிகழ்ச்சிகளுக்காகச் செயல்பட்டு வருவதாகவும் இதை இந்து சமய அறநிலையத்துறையினர் கைப்பற்ற முடியாது என்று கூறி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய போலீசார் முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications