ராகுல் பார்ட்டி வீடியோ! சீன பெண் யார்? இந்தியாவுக்கு எதிராக பெரிய திட்டமா? கேள்வி கேட்கும் சிடிஆர்!
சென்னை : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அவர் பார்ட்டியில் கலந்து கொண்டது பிரச்சினை இல்லை எனவும், அவர் ஒரு சீன பெண்ணுடன் இருப்பது போல் தெரிகிறது எனவும், இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் சேர்ந்து ஏதாவது பெரிய திட்டம் தீட்டுகிறாரா? என பாஜக மூத்த தலைவர் சி.டி.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, பஞ்சாப் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் படுதோல்வி என அடுத்தடுத்து தோல்விகளில் சிக்கி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமை கடும் நெருக்கடியில் உள்ளது.
கட்சியை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பாஜக அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ராகுல் காந்தி சர்ச்சை
கட்சியை மீட்டெடுக்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதில்லை என வெளிப்படையாகவே அறிவித்தார். இதனால் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது தர்மசங்கடம் அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
|
பார்ட்டி வீடியோ
அதாவது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வெளிநாட்டில் நடந்த ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டு ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. வண்ண விளக்குகளுடன், பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ள ராகுல் காந்தி , பெண் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது நண்பர் ஒருவரது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேபாள நாட்டிற்கு ராகுல்காந்தி சென்றதாகவும், அந்நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணத்திற்கு பிறகு நடைபெற்ற பார்ட்டியில் ராகுல் காந்தி கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பாஜக விமர்சனம்
இதனை அந்த பார்ட்டியில் கலந்து கொண்டு இருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு நிலையில் பாஜகவினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கும் சமயத்தில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு பார்ட்டில் பங்கேற்றிருக்கிறார் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர் பாஜக மூத்த தலைவர்கள்.

சிடி ரவி கேள்வி
இந்நிலையில் ராகுல் சீன பெண்ணுடன் இருப்பது போல் தெரிகிறது எனவும், இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் சேர்ந்து ஏதாவது பெரிய திட்டம் தீட்டுகிறாரா? என பாஜக மூத்த தலைவர் சி.டி.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ராகுல் காந்தி பார்ட்டியில் கலந்து கொள்வதால் இந்தியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அதுதான் அவரது முக்கிய வேலை., ஆனால் அவர் யாருடன் பார்ட்டி நடத்துகிறார்? அவர் ஒரு சீன நாட்டவர் போல் தெரிகிறது. ஏன் அவரது வம்சம் பெரும்பாலும் சீனர்களுடன் உள்ளது? இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் சேர்ந்து ஏதாவது பெரிய திட்டம் தீட்டுகிறாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications