India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஸ்டண்ட் கனல்" மூட்டிய அனல்.. கடவுள் இல்லை, காட்டுமிராண்டியா? அப்போ?.. பாஜக நாராயணன் நறுக் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று சொல்வது கருத்துரிமை என்றால், கடவுளை வணங்காதிருப்பவன் வன்மம் கொண்ட மிருகம்! என்று சொல்வதும் கருத்துரிமை தானே?" என்று தமிழக பாஜகவின் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.. இதையடுத்து, இது ஒரு விவாதமாகவே சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளது.

சமீபகாலமாகவே, இந்து சமய அறநிலைத்துறையை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்... அதேபோல் திராவிடம், பெரியாரின் கருத்துக்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்..

திடீர் திடீரென பெரியார், அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்படுகின்றன.. அதற்கு நிறம் மாற்றப்படுகிறது.. அதிலும் பெரியார் சிலைகள் தொடர்ந்து உடைக்கப்பட்டும் வருவது அதிகமாகி உள்ளது.

மசூதியை இடித்து ரத்தக்களறி நடந்தது.. குதர்க்கவாதம் எடுபடாது.. பாஜக + கனல் கண்ணனுக்கு அழகிரி நறுக்மசூதியை இடித்து ரத்தக்களறி நடந்தது.. குதர்க்கவாதம் எடுபடாது.. பாஜக + கனல் கண்ணனுக்கு அழகிரி நறுக்

 ஸ்டண்ட் மாஸ்டர்

ஸ்டண்ட் மாஸ்டர்

இதனிடையே, இந்துக்களுக்கு எதிராக திமுகவும், அதன் கூட்டணிகளும் செயல்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.. எனவேதான், இந்து முன்னணியின் சார்பில் கடந்த ஒரு மாதமாக இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கு நடைபெற்று வந்தது.. அதன் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் நடந்தபோதுதான், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது இன்று வரை கனன்று கொண்டிருக்கிறது.

 கனல் கண்ணன்

கனல் கண்ணன்

"ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று பேசியிருந்தார். கனல் கண்ணன் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று புகார்கள் போலீசில் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.. இதையடுத்து அவர் எந்நேரமும் கைதாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மற்றொருபுறம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, வானதி சீனிவாசன் வரை கனல் கண்ணன் பேச்சுக்கு ஆதரவு தந்து வருகின்றனர்.

மடையன்

மடையன்

இந்நிலையில், தமிழக பாஜகவின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "கடவுள் இல்லை! கடவுள் இல்லை !! கடவுள் இல்லவே இல்லை!!! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்பியவன் அயோக்கியன் ! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று சொல்வது கருத்துரிமை என்றால், கடவுள் உள்ளார்! கடவுள் உள்ளார்!! உறுதியாக உள்ளார் !!! கடவுள் இல்லை என்று கற்பிக்க நினைத்தவன் மடையன்! கடவுள் இல்லை என பரப்பியவன் மதி கெட்டவன் ! கடவுளை வணங்காதிருப்பவன் வன்மம் கொண்ட மிருகம்! என்று சொல்வதும் கருத்துரிமை தானே?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

 தர்மமா?

தர்மமா?

நாராயணன் திருப்பதி இப்படி பதிவிட்டதுமே, இது ஒரு விவாதமாக உருவெடுத்துள்ளது... ஆதரவும், எதிர்ப்புமாக கருத்துக்களும் பதிவாகி வருகின்றன.. "கடவுள் உண்டு என்று சொல்லுங்கள் யாரும் மறுக்கமாட்டார்கள்! அதற்காக கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலையை உடைக்க வேண்டும் என்று சொல்வதுதான் இந்துக்களின் தர்மமா? மக்களிடத்தில் மோதலை உருவாக்கும் வகையில் பேசுவது எந்த வகையில் நியாயமானது?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது..

 திராவிட சித்தாந்தம்

திராவிட சித்தாந்தம்

இதற்கு, "கடவுள் இல்லை என்று சொல்லுங்கள்! யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் கடவுள் சிலையை உடைத்ததும், கடவுள் படத்திற்கு செருப்பு மாலை போடுவதும், நிந்தித்தலும்தான் திராவிட சித்தாந்தமா? மக்களிடத்தில் கொதிப்பை உருவாக்காதா? அவ்வாறு நடப்பது எந்த வகையில் நியாயமானது?" என்று பதில் கேள்வியை பாஜகவினர் எழுப்பி வருகின்றனர்.

 கிழவன் சிலைகள்

கிழவன் சிலைகள்

"கடவுள் இல்லை என்று, இந்து கடவுள் மட்டுமா சொன்னார்? ஒரு கடவுளும் இல்லை என்று சொன்னார்.. மற்ற இரண்டு மதங்களும் அமைதியாக இருக்கும்போது, உங்களுக்கு மட்டும் ஏன் கோபம் வருகிறது.. செத்து போன கிழவன பார்த்து இன்னும் உன் கூட்டத்துக்கு பயம் போகவில்லை" என்று கருத்துக்கள் விழுகின்றன.. இதற்கு பாஜகவினர், "தமிழக இந்து சிங்கள்கள் நினைத்தால் கிழவன் சிலைகள் ஒன்று கூட இருக்காது" என்று பதிலடி தந்து வருகிறார்கள்.. ஆக மொத்தம், மூத்த தலைவர் நாராயணன் பதிவிட்ட இந்த ட்வீட்டால், அவரது ட்விட்டர் பக்கமே படுபிஸியாக காணப்படுகிறது.

English summary
bjp senior leader narayanan tirupati has criticized periyarism and tweeted about it திருப்பதி நாராயணன் பெரியார் கொள்கை குறித்து கருத்து கூறி ட்வீட் பதிவிட்டுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X