"ஆர்எஸ்எஸ்".. இந்து மதம் எங்களுடையது.. அழகிரி ஒரே போடு.. "புத்தி பிரண்டு விட்டதே".. எச்.ராஜா கிண்டல்

கேஎஸ் அழகிரியை கிண்டல் செய்து பாஜக எச்.ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து மதம் எங்களுக்குச்சொந்தமானது.. நீங்கள் அதில் புகுந்தவர்கள். நீங்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள். 'ஆர்எஸ்எஸ்'-யே வைத்திருந்தால் இன்று இந்து என்ற மதம் இருந்திருக்காது" என்று மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசியதற்கு, பாஜக கண்டனம் தெரிவித்து, கிண்டலடித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும், வேலை இல்லாத திண்டாட்டம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்தும், காங்கிரஸ் சார்பில் நேற்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அந்தவகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கண்டன போராட்டங்கள் நடந்தன.. சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

 அழகிரி

அழகிரி

அப்போது மாநில தலைவர் கேஎஸ் அழகிரி பேசியபோது, பாஜகவை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.. மத்திய பாஜக கண்டித்ததுடன், அழகிரி பேசியதன் சுருக்கம் இதுதான்: "சோனியாகாந்தி, ராகுல் காந்தி மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்... இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எத்தகைய எதிர்வினை வரும் என நோட்டம் விடுகிறார்கள். நாடு முழுவதும் சிறந்த எதிர்வினையை நாம் காட்டி வருகிறோம். சுதந்திரத்திற்கு பிறகு தற்போதுதான் காங்கிரஸ் கட்சி போராட ஆரம்பித்துள்ளது ஆங்கிலேயர்களை துரத்தியது போல, கொள்ளையர்களையும் துரத்துவோம்.

"ஆர்எஸ்எஸ்"

மதத்தில் சீர்திருத்தம் வேண்டும் என சொல்கிறோமே தவிர மதம் வேண்டாம் என்று சொல்லவில்லை. இது எங்களுக்கு சொந்தமான மதம்... நீங்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்து புகுந்தவர்கள். நீங்கள் பூர்வீக குடிகள் அல்ல. ராணுவத்தில் இருக்கும் கட்டுப்பாட்டை, கட்சிக்குள் கொண்டுவந்தால் ராணுவத்தை விட காங்கிரஸ் கட்சி வலிமையானதாகிவிடும். கட்சிக்குத் தேவை சர்வாதிகாரம் அல்ல.. கட்டுப்பாடு மட்டுமே.. அனைவரும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும்.. இந்து மதம் எங்களுக்கு சொந்தமானது.. நீங்கள் அதில் புகுந்தவர்கள். நீங்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள். "ஆர்எஸ்எஸ்"-யே வைத்திருந்தால் இன்று இந்து என்ற மதம் இருந்திருக்காது" என்றார்.

 நாராயணன்

நாராயணன்

அழகிரியின் இந்த பேச்சுக்கு, தமிழக பாஜக எதிர்வினையாற்றி வருகிறது.. "இந்து மதம் காங்கிரசுக்கு சொந்தமானதும், பாஜகவினர் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தவர்கள்" என்றும் கேஎஸ் அழகிரி சொன்னதை, பாஜகவின் மாநில துணை தலைவர் திருப்பதி நாராயணன் விமர்சித்திருந்தார்.. "அடப்பாவிகளா, அதையும் விட்டு வைக்கவில்லையா? இத்தாலிய அடிவருடிகளுக்கு என்ன பேசுகிறோம் என்றே புரிவதில்லை.. உளறிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ட்வீட் போட்டிருந்து கிண்டலடித்து இருந்தார்.

 கிண்டல்

கிண்டல்

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும், அழகிரியின் பேச்சை கிண்டலடித்துள்ளார்.. நம் ஒன்இந்தியாவில் வெளியாகி இருந்த அழகிரி செய்தியை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, "அட பாவமே, இவருக்கு இப்படி புத்தி பிரண்டு விட்டதே" என்று கேலி செய்துள்ளார்... இதையடுத்து, எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. யாருக்கு புத்தி பேதலித்துவிட்டது, யாருக்கு மனநிலை சரியில்லை என்று இதற்கு முன்பு விவகாரம் எழுந்தது? என்றெல்லாம் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+