கோயில் பெயரில் நிதி வசூல் மோசடி... பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்தை 15 நாள் சிறையிலடைக்க உத்தரவு
சென்னை: பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் பெயரில் ரூ.34 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் இளைய பாரதம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
இவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் பெயரை பயன்படுத்தி இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

கோயில் அலுவலர் புகார்
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் பழுதடைந்த சிலைகளை சீரமைத்து தருவதாகக் கூறி நிதி திரட்டி மோசடி செய்ததாக கோயில் செயல் அலுவலர் அரவிந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆவடி மிட்னமல்லியை சேர்ந்த யூடிபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி மத்திய குற்றவியல் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

6 மணி நேரம் விசாரணை
அவரிடம் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோர் சுமார் 6 மணி நேரம் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதன் முடிவில் கார்த்திக் கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(d) IT Act தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டன.

நீதிமன்றத்தில் ஆஜர்
முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் கார்த்திக் கோபிநாத்தை போலீசார் ஆஜர்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது. உடனே கார்த்திக் கோபிநாத்தின் ஆதரவாளர்களான பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர், பாஜக விளையாட்டு துறை மேம்பாட்டு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் அஸ்வீன் தலைமையில் ஏராளமானோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் குவிந்து கலைந்து சென்றனர்.

15 நாட்கள் நீதிமன்ற காவல்
இதனை தொடர்ந்து அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கார்த்தி கோபிநாத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கும் ஏராளமான பாஜகவினர் திரண்டிருந்தார். இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த அம்பதூர் விரைவு நீதிமன்ற நீதிபதி கார்த்திக் கோபிநாத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications