ஆஹா.. தமிழக பாஜக ரூட் வேறாக இருக்கிறதே.. அப்படீன்னா??
திருவாரூர் இடைத்தேர்தலை சந்திப்பது குறித்து தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் பற்றின சிந்தனையே இப்போதுவரை பாஜகவுக்கு இல்லை என்று தெரிகிறது.
பரபரத்து வந்த நாடாளுமன்ற தேர்தலை விட்டுவிட்டு, தமிழக தலைவர்கள் எல்லாம் திருவாரூர் இடைத்தேர்தலை பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கான வேட்பு மனு தாக்கல், வேட்பாளர் அறிமுகம், பிரச்சார வியூகம் என பக்கா பிளான்கள் களை கட்டி கொண்டிருக்கின்றன.
ஆனால் தமிழக பாஜக சத்தமே இல்லாமல் உள்ளது. திருவாரூர் இடைத்தேர்தல் பற்றி எப்ப கேட்டாலும், "அது குறித்து இன்னும் முடிவாகவில்லை... எங்கள் கவனம் எல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருவதில்தான் உள்ளது" என்றே பதில் வந்தது.

கொஞ்சம் "டல்"
விருப்ப மனு தாக்கலுக்கும் ஒருத்தரும் பாஜக சார்பாக செல்லவில்லை, அது சம்பந்தமான பேச்சு-மூச்சே காணோம். எடுத்ததுக்கெல்லாம் ஸ்டாலினுடன் மல்லுக்கட்டி கொண்டும், கவுண்ட்டர் கொடுத்தும் கொண்டும் இருந்த மாநில தலைவர் தமிழிசை கொஞ்சம் ஆஃப் ஆகி கிடக்கிறார்.

எதற்காக குழப்பம்?
திருவாரூர் கருணாநிதி தொகுதிஎன்பதால் அங்கே போட்டியிட தயக்கமா, அல்லது தினகரன் எப்படியாவது, எதையாவது செய்து ஜெயித்து விடுவார் என்ற சந்தேகமா, அல்லது சுயேச்சையாகவாவது அழகிரி தடாலடியாக இறங்கி ஓட்டுக்களை பிரித்துவிடுவார் என்ற பீதியா, அல்லது தங்கள் கூட்டணியான அதிமுக புயல் நிவாரணம், பொங்கல் பரிசு என இறங்கி வாக்குகளை தங்கள் பக்கம் அள்ளிக் கொள்ளும் என்ற குழப்பமா என தெரியவில்லை. ஆனால் தமிழிசை இப்போது வரை இடைத்தேர்தல் பற்றி மவுனம் காத்து வருவது அந்த கட்சிக்கு பலவீனத்தைதான் தந்து கொண்டிருக்கிறது.

நிலைப்பாடு
ஆர்.கே.நகர் போல இங்கேயும் நோட்டா வந்துவிடுமா என்று தயங்குகிறார் என்றால், வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வியும் வருகிறது. கடைசியாக 6-ம் தேதி தங்கள் நிலைப்பாட்டை சொல்கிறோம் என்று தமிழிசை ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதனால் நாளை மறுநாள்தான் தமிழக பாஜகவுக்கு வேட்பாளர் நிறுத்தப்படுவாரா, மாட்டாரா என்று உறுதியாக தெரிய வரும்.

சிக்கலை தரும்
ஆனால், உண்மை என்னவென்றால், திருவாரூரில் போட்டியிட தமிழிசைக்கு நிறையவே ஆர்வம் இருந்தாலும், மற்ற நிர்வாகிகளுக்குதான் இதில் அவ்வளவாக உடன்பாடில்லை என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது. ஒருவேளை டெபாசிட் இந்த தொகுதியிலும் இழந்துவிட்டாலும், பெரிய தேர்தலின் தொகுதி பங்கீட்டுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று பாஜக தலைமை யோசிப்பதாக சொல்லப்படுகிறது.
|
கவனம் செலுத்துகிறோம்
அதற்கேற்றவாறு தமிழிசையும் இன்றைக்கு ஒரு ட்விட்டரில் கருத்து ஒன்றினை தெரிவித்திருக்கிறார். அதில், "இடைத்தேர்தலைவிட நாடாளுமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்துகிறோம்" என்று கூறியுள்ளார். அதாவது இன்றைக்குவரை திருவாரூர் பற்றின சிந்தனை இல்லை என்று மட்டும் இந்த ட்வீட் மூலம் தெளிவாகிறது.

எஸ்கேப்
இருந்தாலும் 6-ம் தேதி முடிவை சொல்கிறோம் என்று தமிழிசை சொல்லிவிட்டதால், அவரது வார்த்தைக்கு மதிப்பளித்து கட்சியின் நிலைப்பாட்டை அறிய மக்கள் ஆர்வமாகவே இருக்கிறார்கள். எனினும் என்னத்தையாவது ஒரு காரணத்தை சொல்லி இப்படியே திருவாரூரை பாஜக தட்டிக்கழித்து எஸ்கேப் ஆகிவிடும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications