'கூட்டணி' அதிமுக இல்லையென்றால் என்ன.. பாஜக சலித்துக் கொண்டு செல்லாது.. வெடிக்கும் கரு.நாகராஜன்!
சென்னை: அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் பாஜக சலித்துக் கொண்டு செல்லாது என அக்கட்சியின் துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் தனித்தனியாகவே இயங்கி வருகின்றனர். இருந்தும் கட்சியின் அடிப்படை கட்டமைப்பில் இருந்து மூத்த நிர்வாகிகள் வரை எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கு சிறிதும் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி பலமுறை திட்டவட்டமாக கூறி வருகிறார். ஆனால் டெல்லி மேலிடம் இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரின் இணைப்பையும் தொடர்ந்து வலியுறுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.

ஒபிஎஸ் - இபிஎஸ் மோதல்
இதன் காரணமாகவே பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்தபோது எடப்பாடி பழனிசாமிக்கு தனியாக சந்திக்க அனுமதி வழங்கப்படாமல் ஓபிஎஸ் உடன் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2024ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு இருவரும் இணைந்து செயல்பட பாஜக அறிவுறுத்தி வந்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மீண்டும் இணைப்புக்கு சாத்தியமே இல்லை என்று பதில் அளிப்பதாக பார்க்கப்படுகிறது.

இபிஎஸ் கொடுத்த சிக்னல்
இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி பாஜக மீது அப்செட்டில் இருப்பதாக சமீபத்திய பேட்டிகளில் இருந்து அறிய முடிகிறது. நேற்று அமித் ஷாவை ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி கூறுகையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது அரசு வேலையாக வந்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சந்திப்போம்.

அவசியமில்லை
தனிப்பட்ட வேலையாக வந்த அமித் ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பாஜக ஒரு தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டு காலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு. அமித்ஷா, பிரதமர் மோடி எப்போது சென்னை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி சென்று பார்க்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.

செங்கோட்டையனின் பரபரப்பு பேச்சு
இதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில் எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்துப்போட்டியிடக் கூடிய ஒரே கட்சி அதிமுகதான். அதிமுகவால் தனித்து நிற்க முடியும். நம்மைவிட்டு சென்றவர்களை பற்றி கவலை இல்லை. நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் பேசி இருந்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பாஜக இல்லாமல் தனித்துப் போட்டியிடவும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தனித்து போட்டியிட்ட போது, அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்திருந்தனர். இந்த நிலையில் அதிமுக தனித்து போட்டியிடுவதாக பேசி வருவது குறித்து பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக மகிழ்ச்சி
இதுகுறித்து கரு.நாகராஜன் கூறுகையில், அதிமுக தனித்து போட்டியிட தயார் என்று செங்கோட்டையன் பேசுவதால் நாட்டில் அனைவரும் கட்சியை கலைத்துவிட்டு செல்லப் போகிறார்களா? இதையெல்லாம் கவனிக்க தயாராக இல்லை. செங்கோட்டையன் பேசியது தேவையற்ற ஒன்று. ஒற்றுமை தான் பலம் என்று பாஜக நினைக்கிறது. எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்தார். அதனை பாஜக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது.

பாஜகவுக்கு தடையில்லை
தேர்தலை பலமாக சந்திப்போம் என்று பேசினால் நியாயமானது. அதேபோல் அதிமுக கூட்டணியில் இல்லையென்றால் நாங்கள் சலித்துக் கொண்டு செல்பவர்கள் அல்ல. நாங்க்லள் ஏற்கனவே நிரூபித்துக் காட்டியுள்ளோம். நான்கு நாட்களில் முடிவு செய்து உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம். அதுபோல் மீண்டும் 234 தொகுதிகளிலும், 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications