சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவ்வளவு அக்கறை இருந்தால்.. எங்களுடன் சேர்ந்து போராடவேண்டியதுதானே.. யாரை சொல்கிறார் தமிழச்சி?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.

தமிழ் மொழியின் திருவள்ளுவர், தமிழ்ப் புலவர்கள் குறித்து பிரதமர் பெருமை பேசுவது வெறும் வாய் வார்த்தையாக இருக்க கூடாது. இதற்கு எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன். மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் கொடுப்பேன்.

பேருந்து நிலையத்திலேயே மோதல்.. மாறி மாறி தாக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. மதுரையில் அதிர்ச்சி பேருந்து நிலையத்திலேயே மோதல்.. மாறி மாறி தாக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. மதுரையில் அதிர்ச்சி

புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்

பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்காக ஆண் குழந்தைகள், ஆசிரியர்கள், பள்ளியில் உள்ள அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொடுதல் குறித்த விழிப்புணர்வு குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும், அது தொடர்பாக ஆசிரியர், பெற்றோருக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

 தற்கொலை தீர்வல்ல

தற்கொலை தீர்வல்ல

எந்த விசயத்திற்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டும்..இந்த பிரச்சனைகளின் ஆணி வேர் பெண் குழந்தைகளை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பதுதான். இந்தியாவிலேயே பாலியல் குற்றங்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதும் , புகாரளிக்கும் பெண்களின் விவரத்தை பொதுவில் தெரியாதவாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளதும் தமிழகத்தில் மட்டும்தான்.

பா.ஜ.க குற்றம்

பா.ஜ.க குற்றம்

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க வேண்டும் என பா.ஜ.க குற்றம் சுமத்துகிறது. விலை குறைப்பிற்கான லகான் மத்திய அரசின் கையில்தான் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து ஹிட்லர் வாரிசு போல விலை குறைப்பு தொடர்பாக பொய் கூறுகிறார்கள்.

 தி.மு.க.வின் அழுத்தம்

தி.மு.க.வின் அழுத்தம்

நடைபெற உள்ள கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் குறித்து தி.மு.க சார்பில் ஆலோசித்து வருகிறோம். 750 உயிர்களை பலி கொடுத்துத்தான் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது. உழவர்களின் பலம் யாரையும் அடிபணிய வைக்கும். நீட் தேர்வுக்கெதிரான தி.மு.கவின் அழுத்தம் தொடரும்.

இணைந்து போராடும்

இணைந்து போராடும்

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் நீட் தேர்வுக்கு எதிராக பாஜக எங்களுடன் இணைந்து போராடும். பஞ்சு உற்பத்தி தொடர்பான பஞ்சாலை உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக சட்டமன்ற , நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆ லோசனை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

English summary
South Chennai MP Tamilachchi Thangapandian said that the BJP will fight with us against the NEET exam if it cares about the poor simple students in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X