ரஜினி..விஜய் மட்டுமல்ல கமலிடமும் பாஜக ஆதரவு கேட்கும்.. ஒரே போடு போட்ட வானதி சீனிவாசன்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், ரஜினி, கமல், விஜய் என அனைவரிடமும் நாங்கள் ஆதரவு கேட்போம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பாஜகவை பொறுத்த வரையில் இந்த லோக்சபா தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த முறையும் பிரதமர் வேட்பாளராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியைதான் அவர்கள் களமிறக்கியுள்ளனர். இதில் அவர் வெற்றிபெற்றால், நேருவுக்கு பின்னர் 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் தலைவர் என்கிற பெருமையை பெறுவார். மட்டுமல்லாது 2025ம் ஆண்டு நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமானதாக இருக்கும். எனவே தேசிய அளவில் வெற்றிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கிறது.

இங்கு கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரியதாக ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. எனவே இதனை சரிசெய்ய, இந்த முறை கொஞ்சம் பலமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. பாஜகவின் கணிப்புப்படி, ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், தேமுதிக மற்றும் இதர சிறு சிறு கட்சிகள் தங்கள் பக்கம் வந்தாலே வெற்றிதான் என்று கணக்குபோட்டு வைத்திருக்கிறது.
அதற்கேற்றபடி சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் , இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் வரிசைக்கட்டி நின்றனர். எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அதிமுக-பாஜக கூட்டணி கிடையாது என்று அறிவித்தாலும், பாஜகவை விமர்சிக்காத வரையில் அக்கட்சிக்கு லாபம்தான்.
எனவே தங்களது கூட்டணியை பாஜக வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோவை தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ரஜினி, கமல், விஜய் என அனைவர்களிடமும் நாங்கள் ஆதரவு கேட்போம் என்று கூறியுள்ளார். எல்லா நடிகர்களிடமும் பாஜக ஆதரவு கேட்கும், கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவர்கள் விருப்பம். செய்தியாளர்களான உங்களிடம் கூடத்தான் நாங்கள் ஆதரவு கேட்போம் என்று கூறினார்.
இந்த முறை மக்கள் நீதிமய்யம் தரப்பிலிருந்து இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படி இருக்கையில், வானதி சீனிவாசனின் பேச்சு மய்யத்தை பாஜக இழுக்க முயற்சிக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏற்கெனவே ரஜினியின் செயல்பாடுகள் பாஜவுக்கு ஆதரவளிப்பதை போன்று இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. எனவே ரஜினி, கமல் ஆகியோரை தங்கள் வசப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் வாக்குவங்கியை உயர்த்தலாம்.
சமீபத்திய நாட்களில் நடிகர் வஜய் தனது ரசிகர் மன்றம் மூலம் எடுக்கும் சில முன்னெடுப்புகள் அவரது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. ஒருவேளை அவர் அரசியலில் நுழைந்தால் அவரையும் தங்கள் வசப்படுத்த பாஜக முயற்சிப்பதன் வெளிப்பாடாகத்தான் வானதி சீனிவாசனின் பேச்சு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications