சென்னை Infosys ஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! Layoff நடக்கும் நேரத்தில் பரபரப்பு!
சென்னை: சென்னையில் ஐடி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்திற்கும், துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை ஒன் நிறுவனத்திற்கும் மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரில் இன்போசிஸ் எனும் மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கானோர் பல்வேறு ப்ராஜெக்ட்களில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய தினம் இன்போசிஸ் நிறுவனத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து தகவலின்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
1 மணி நேரம் தொடர்ந்த இந்த சோதனையில் இது வதந்தி என தெரியவந்தது. அது போல் சென்னை துரைப்பாக்கத்தில் இருக்கும் சென்னை ஒன் என்ற நிறுவனத்திற்கும் இது போல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் தேடி வருகிறார்கள்.
டிசிஎஸ், அசென்ச்சர், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் திறன் மேம்பாடு, செலவை குறைக்கும் நோக்கத்துடன் தங்கள் நிறுவனங்களில் மறுசீரமைப்பு பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது.
எல்லா துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் தேவை அதிகரித்துவிட்டதால் தற்போது டிசிஎஸ் நிறுவனம் 2 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறதாம். அது போல் விப்ரோவில் அதிகாரப்பூர்வ பணிநீக்கங்கள் உறுதி செய்யப்படாவிட்டாலும் 24,516 வேலைகளை நிறுவனம் குறைத்துள்ளது. எச்சிஎல் நிறுவனமும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைகளை குறைத்துள்ளது.
அது போல் இன்போசிஸ் நிறுவனத்திலும் பணிகுறைப்பு, ஊழியர்கள் குறைப்பு என இருப்பதால் ஐடி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏஐ ஆக்கிரமிப்பால் இன்போசிஸ் நிறுவனம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் ஊழியர்கள் தினமும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என தெரிவித்துள்ளது. அண்மையில் வாரத்திற்கு 70 மணி நேரம் ஊழியர்கள் அனைவரும் பணிபுரிய வேண்டும் என நாராயணமூர்த்தி தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்போசிஸ் ஊழியர்கள் தினமும் 9.15 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற மின்னஞ்சல் உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது போன்ற ஊழியர் குறைப்பு, நேர கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஐடி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications