தாலி கட்டும் நேரத்தில் வந்த போலீஸ்.. அதிர்ந்த போண்டா மணி.. சுமுகமாக தீர்த்த சிங்கமுத்து
சென்னை: தாலி கட்டும் நேரத்தில் போலீஸார் வந்ததாக நடிகர் போண்டா மணியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சிங்கமுத்து தெரிவித்திருந்தார்.
இலங்கையைச் சேர்ந்த போண்டா மணி. 10ஆவது வரை படித்திருக்கிறார். அங்கு இலங்கை போரில் தனது குடும்பத்தினர் 8 பேரை இழந்த நிலையில் போண்டாமணி காலில் குண்டு அடிப்பட்டு சென்னை வந்தார். அங்கு நாடக கம்பெனியில் வேலை செய்த நிலையில் அவருக்கு 1983 ஆம் ஆண்டு பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜ் வாய்ப்பு கொடுத்தார்.

இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். இவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் உனக்கு என்ன தெரியும் என கேட்டு கிண்டல் செய்தனராம். ஆனால் தனக்கு போண்டா மணியின் காமெடிதான் மிகவும் பிடிக்கும் என ஒரு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தெரிவிக்கும் அளவுக்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு பருவக் காதல் என்ற படத்தில் நடித்த போது நிஜ சாக்கடையில் விழுந்ததால் அவருக்கு நுரையீரலில் தண்ணீர் கோர்த்துகொண்டு மூச்சுதிணறல் ஏற்ட்டது. இதையடுத்துதான் அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். ஆனால் நேற்று முன் தினம் இரவு அவருக்கு திடீரென குளிர் காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இலங்கைத் தமிழரான அவருக்கு யாரும் திருமணத்திற்கு பெண் கொடுக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் கன்னடத்து பெண் மாதவியை போண்டாமணி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவருடைய இறப்புக்கு அஞ்சலி செலுத்த வந்த சிங்கமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் அரிசி வியாபாரம் செய்து கொண்டிருந்தேன்.
அப்போது போண்டா மணிக்கு தினமும் ரூ 25 கொடுத்து சாப்பிட வைத்துக் கொள்ளச் சொல்வேன். மேலும் நான் போண்டாமணியை திருமணம் செய்துகொள்ள சொன்ன போது இலங்கையை சேர்நத தனக்கு யாரும் பெண் தர முன் வரவில்லை என தெரிவித்தார். இதனால் நானே பெண் பார்த்து என் சொந்த செலவில் அவருக்கு திருமணம் செய்து வைத்தேன்.
திருமணம் அன்று தாலி கட்டும் நேரத்தில் போலீஸார் வந்துவிட்டனர். அவர் இலங்கையில் இருந்து வந்த அகதி என்பதால் அவர் மீது ஒரு சந்தேகத்தின் பேரில் கைது செய்ய வந்தனர். இதனால் கைதாவதற்கு முன்பு அவர் அவசர அவசரமாக தாலி கட்டினார். அதன் பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று போண்டாமணி இங்கே நடிக்க தான் வந்திருக்கிறார் என சொன்னதும் அவரை வெளியே விட்டார்கள் என தெரிவித்தார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications