பிராமணர் கூட்டு இல்லாமல்.. திமுகவுக்கு அரசியலே இல்லை.. தள்ளாத வயதிலும்..நிர்வாகிக்கு கஸ்தூரி பதிலடி

பிராமணர்கள் விவகாரம் குறித்த கஸ்தூரி ட்வீட் சர்ச்சையாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கஸ்தூரி ஒரு ட்வீட்டினை பதிவிட, சோஷியல் மீடியாவில் அது விவாதமாகவும், வாதமாகவும், சர்ச்சையாகவும் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு நடிகையாக மட்டுமேயல்லாமல் சமூக அக்கறையுடனும் இருப்பவர் நடிகை கஸ்தூரி... மக்களை பாதிக்கும் பிரச்சனைகள், வாழ்வியலுக்கான அடிப்படை பிரச்சனைகள் குறித்து விடாமல் தன்னுடைய கருத்துக்களை சொல்பவர்.

யாருக்காகவும் பயப்படமாட்டார்.. சொல்ல வந்த கருத்தை துணிந்து சொல்வார்.. இதனால் பல சமயங்களில் கஸ்தூரியின் கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்திவிடும்..

 சர்ச்சை

சர்ச்சை

இணையதளவாசிகளும் திரண்டு வந்து கஸ்தூரியை திட்டுவார்கள்.. ஆனால், அதற்கும் துணிச்சலாக பதிலடி தந்து பிறரை வாயடைத்து விடுவார் கஸ்தூரி. இப்போது அவர் ஒரு ட்வீட்டை போட அது பெரும் பிரச்சனையாக வெடித்து வருகிறது.. நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளதால், அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளன.. இன்றுடன் பிரச்சாரமும் முடிகிறது. எனவே, பல்வேறு தரப்பினர் சோஷியல் மீடியாவில் தங்கள் தரப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

 சரவணன்

சரவணன்

அந்த வகையில், திமுக செய்தித்தொடர்பாளரான சரவணன் அண்ணாதுரை ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், "வாரிசு அரசியல் என கூக்குரலிடும் எவரும், ஆர்.எஸ்.எஸ். தலைவராக பிராமணர் அல்லாதோர் வரமுடியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முன்வருவதில்லை" என்று பதிவிட்டிருந்தார்.. இந்த பதிவுக்கு கஸ்தூரி பதில் ட்வீட் போட்டார்.

 தள்ளாத வயது

தள்ளாத வயது

அதில், " எப்போதெல்லாம் திமுகவுக்கு பிரச்சனை ஏற்படுகிறதோ.. அப்போதெல்லாம் பிராமண துவேஷத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். தள்ளாத வயதில் திருமணம் செய்து வாரிசு தேடியவர் வழிவந்தவர்கள் பேசலாமா மற்ற இயக்கங்களை பற்றி. ராஜாஜி தொடங்கி மமதா, ராகுல், பிரசாந்த் கிஷோர் வரை பிராமணர் கூட்டு இல்லாமல் அரசியலே இல்லையே திமுகவிற்கு, அதை பேசுவீர்களா?" என்று ட்விட்டரில் கேட்டிருந்தார்... அவ்வளவுதான், மொத்த பேரும் திரண்டு வந்து கஸ்தூரியை ட்வீட்டில் பிடித்து கொண்டனர்..

 ஆபாசம் - இடியட்

ஆபாசம் - இடியட்

இதற்கு ஒருவர் வந்து ஆபாசமாக ஒரு கேள்வியை கேட்டதுடன், "நீயெல்லாம் ஒரு ஆளு. Idiot" என்று அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி கஸ்தூரியை திட்டினார்.. உடனே கஸ்தூரியும் பதிலுக்கு, தன் பாணியிலேயே வறுத்தெடுத்து, "இது வரலாறு மிஸ்டர் இடியட். உங்களது பெயரை இடியட் என்று போட்டு ட்வீட் போட்டதற்கு நன்றி" என்று பதிலடி தந்தார்.. பிறகு இன்னொருவர் வந்து, "அது என்ன வரலாறு? அவர் குழந்தை பெறுவதற்காக திருமணம் செய்து கொண்டாரா? அவரைப் பொறுத்தவரை ஒரு துணைக்காக திருமணம் செய்து கொண்டார். குப்பையான மனம் கொண்டவர்களால்தான் இதை வேறு மாதிரியாக சிந்திக்க முடியும் என்றார்..

பதிலடி

பதிலடி

இவரையும் கஸ்தூரி விடவில்லை.. "அவரது ஆதரவாளர்கள்தான் சொல்கிறார்கள், அவர் திருமணம் செய்து கொண்டார் என்று. தனது சொத்துக்களுக்கு வாரிசு வேண்டும் என்பதற்காகத்தானே அவர் திருமணம் செய்து கொண்டார். அதைத்தான் நானும் சொல்லியுள்ளேன்?" என்றதுமே அதற்கு இன்னொருவர் வந்து வேறு கேள்வியை எழுப்பினார்.

 அரசியல் வாரிசு

அரசியல் வாரிசு

அதேபோல, "தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்" என்று ஒருவர் பதிவிட, அதற்கு, "இது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியது அல்ல என்றும், குடும்ப உறுப்பினர்களை மட்டுமே அரசியல் வாரிசாகக் கருதும் நிர்ப்பந்தம் பெரியாரிடம் இருந்து, அது எவ்வளவு சரி என்று தான் பேசுவதாகவும், பெரியார் உண்மையில் மணியம்மையை, தன் வாரிசாகக் கொள்வதற்காகவே திருமணம் செய்துகொண்டார்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படி கஸ்தூரி ஒரே ஒரு ட்வீட்டை பதிவிட, அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் காரசாரமான பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+