சார் எனக்கு குடிப்பழக்கமே கிடையாது.. உங்க ப்ரீத் அனலைசர் மிஷின் தப்பு.. போலீஸிடம் இளைஞர் வாக்குவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுப்பழக்கமே இல்லாதவர் மீது மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் பல இடங்களில் விபத்து நேரிட்டு யாருக்காவது காயமோ உயிரிழப்போ ஏற்படுகிறது. இதை தடுக்க அரசு பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதனால் இரவு நேரத்தில் முக்கிய சாலைகள் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபடுகிறார்கள். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருக்கும் வாகனங்களை மடக்கி, வண்டியின் ஆவணங்களை கேட்பர்.

ப்ரீத் அனலைசர்

ப்ரீத் அனலைசர்

மேலும் அவர்கள் குடித்திருக்கிறார்களா என்பதை கண்டறிய ப்ரீத் அனலைசர் என்ற ஒரு கருவியை பயன்படுத்தி வருகிறார்கள். சாதாரணமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோரை போலீஸார் கண்டுபிடித்துவிடுவார்கள். எனினும் ஆதாரத்துடன் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே ப்ரீத் அனலைசர் கருவியை பயன்படுத்தி வருகிறார்கள்.

பைப் வைத்து ஊத வேண்டும்

பைப் வைத்து ஊத வேண்டும்

அந்த வகையில் அந்த அனலைசரில் ஒரு பைப் இருக்கும் அதில் வாயை வைத்து ஊத வேண்டும். அப்போது அந்த கருவியின் மானிட்டரில் எத்தனை சதவீதம் ஆல்கஹால் அவருடைய உடலில் இருக்கிறது என்பதை காட்டும். இதை வைத்து அபராதம் விதித்து வருகிறார்கள். அதில் காட்டும் சதவீதத்தை பொருத்து லைட்டாக குடித்தார்களா இல்லை மூச்சு முட்ட குடித்தார்களா என்பது தெரியவந்துவிடும்.

போலீஸார் அபராதம்

போலீஸார் அபராதம்

இப்படித்தான் போலீஸார் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த ப்ரீத் அனலைசர் தப்பான டேட்டாவை காட்டியதாக புகார் எழுந்துள்ளது. அதாவது சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டையில் வேலை விஷயமாக காரில் சென்றுவிட்டு சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.

தேனாம்பேட்டை

தேனாம்பேட்டை

அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு போலீஸார் தீபக்கின் வாகனத்தை மடக்கினர். அவர் மது அருந்தியிருக்கிறாரா என்பதை அறிய ப்ரீத் அனலைசர் கருவியை கொண்டு சோதனை செய்தனர். அப்போது தீபக் மது அருந்தியிருப்பதாகவும் அவரது உடலில் 45 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாகவும் கூறிய போலீஸார் அபராதத்தை பதிவு செய்ய போவதாக தெரிவித்தனர்.

மதுப்பழக்கமே இல்லை

மதுப்பழக்கமே இல்லை

இதனால் தீபக் அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீஸாரிடம் சார் எனக்கு மதுப்பழக்கமே கிடையாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும் எங்கள் கருவி காட்டியுள்ளது, அதை வைத்து நாங்கள் தினமும் 1000 வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். எனவே மது அருந்தியதை ஒப்புக் கொண்டு ரசீதில் கையெழுத்திடுங்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

 வாழ்நாளில் குடித்ததே இல்லை

வாழ்நாளில் குடித்ததே இல்லை

இதற்கு மறுப்பு தெரிவித்த தீபக், சார் இது வரை நான் வாழ்நாளில் குடித்ததே இல்லை. என்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள், அங்கு எனக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ள சொல்லுங்கள். நீங்கள் தப்பான கருவியை வைத்திருந்தால் அதற்கு நான் அபராதம் செலுத்த வேண்டுமா என வாக்குவாதம் செய்தார்.

ப்ரீத் அனலைசர் தப்பு

ப்ரீத் அனலைசர் தப்பு

உடனே போலீஸாரும் வேறு ப்ரீத் அனலைசரை கொண்டு வந்து சோதனை செய்த போது போலீஸார் அதிர்ந்தனர். காரணம் அந்த இரு முறையும் 0 சதவீதம் என வந்தது. இதையடுத்து போலீஸார் தீபக்கை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் போலீஸார் தவறான ப்ரீத் அனலைசரை வைத்துக் கொண்டு சோதனை நடத்துவதாக தீபக் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கபில்குமார் சராட்கர் கூறுகையில், இது வரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை, சென்னை காவல் துறையில் 320 ப்ரீத் அனலைசர்கள் உள்ளன. இது போன்ற பிரச்சினை இருந்ததே இல்லை, எனவே இதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளதாக கபில் குமார் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+