ஹனிமூனில் 3 முறை மிஸ்ஸான பிளான்.. காதலனுடன் சேர்ந்து கணவரின் கதையை முடித்த சோனம்! மறக்க முடியாத 2025
சென்னை: இந்த 2025 வருடத்தை எடுத்து கொண்டால், இந்தியாவில் கள்ளக்காதல் அட்டகாசங்கள் வழக்கத்தைவிட அதிகமாகவே பெருகி உள்ளன. குடும்பத் தகராறுகள், உயிரிழப்புகள் போன்றவைகளுடன் தம்பதிகளின் பல பச்சிளம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து, எதிர்காலத்தையே தொலைத்து நின்று கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் இந்த வருடம் கள்ளக்காதல் கொலையில், நாட்டையே அதிரவிட்டது மத்திய பிரதேசத்தில் நடந்த ஹனிமூன் கொலையாகும்.. இந்த கொலையை மட்டுமல்ல, இந்த கொலையால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கத்தையும் யாராலும் மறக்க முடியாது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த புதுமண தம்பதி ராஜா ரகுவன்ஷி - சோனம்.. இவர்கள் இரு குடும்பத்தினருமே தொழிலதிபர்கள்.. இருவருக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடந்தது..

தேனிலவுக்காக மணமக்கள் இருவரும் மேகாலயாவுக்கு சென்றிருக்கிறார்கள்.. அங்கே ராஜா ரகுவன்ஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்... இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூரில் கைதான மனைவி சோனமிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான், தன்னுடைய கள்ளக்காதலன் ராஜ் குஷ்வாஹா என்பவர் மூலம் கணவரை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜ் குஷ்வாஹா, கூலிப்படையை சேர்ந்த ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.. இவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையும் நடந்தது.. அப்போதுதான் பல பகீர் தகவல்கள் வெளியாகின.
பகீர் நம்பர் 1
ராஜா ரகுவன்ஷியும் சோனமும் ஹனிமூனுக்கு பெங்களூருவில் இருந்து மேகாலயாவிற்கு கிளம்பியபோதே, கூலிப்படையினர் புதுமண தம்பதியை பின்தொடர ஆரம்பித்துவிட்டார்கள்.. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவே, காதலன் ராஜ் குஷ்வாகா, இந்தூரிலேயே தங்கிவிட்டாராம்.
ஹனிமூனில் புதுமண தம்பதி இருவரும் நோங்கிரியாட் பகுதியில் சுற்றிப்பார்த்துவிட்டு, அங்கிருந்த தங்கியிருந்த லாட்ஜிலேயே தங்கியிருக்கிறார்கள்.. இந்த லாட்ஜூக்கு அருகிலேயே கூலிப்படையினரும் தனியாக வாடகைக்கு ரூம் எடுத்து தங்கினார்களாம்.

பகீர் நம்பர் 2
சம்பவத்தன்று அருவியை சுற்றி பார்க்க புதுமணத் தம்பதியினர் கிளம்பி சென்றுள்ளனர்.. அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் சென்றிருக்கிறார்.. அப்போது சோனம், "நாங்கள் இங்கே தனியாக இருக்க வேண்டும், தனியாகவே சுற்றி பார்த்து கொள்கிறோம், நீங்கள் கிளம்புங்கள்" என்று சொல்லி அந்த வழிகாட்டியை அனுப்பிவிட்டார்.
பிறகு, மலை உச்சிக்கு சென்று செல்ஃபி எடுக்கலாம் என்று கணவரை சோனம் அழைத்து சென்றுள்ளார்.. அப்போதுதான், ஏற்கனவே திட்டமிட்டபடி கூலிப்படையினரையும் சோனம் பின்தொடர்ந்து வர சொல்லி உள்ளார். அதற்குள் தனியாக ரூம் போட்டு தங்கியிருந்த காதலனையும் சோனம் வர சொல்லிவிட்டார்.
பகீர் நம்பர் 3
பிறகு அனைவரும் சேர்ந்து, மாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷியை அங்கேயே கொடூரமான ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிட்டார்கள்.. பிறகு சோனமும் இணைந்து, ராஜா ரகுவன்ஷி உடலை சுமார் 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு, பைக்குகளில் அனைவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய 20 லட்சம் ரூபாய் தருவதாக சோனம் வாக்குறுதி தந்திருந்தாராம்..
பகீர் நம்பர் 4
கொலையை செய்து முடித்ததுமே, சோனத்தை மட்டும் எப்படி தப்பிக்க வைப்பது என்று அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.. ஆற்று நீரில் சோனம் அடித்து செல்லப்பட்டதாக நாடகம் நடத்தலாமா அல்லது வேறு ஒரு பெண்ணைக் கொலை செய்து எரித்துவிட்டு அதனை சோனம் என நம்ப வைக்கலாமா என்றெல்லாம் திட்டமிட்டார்களாம்.
ஆனால், சோனம் தன்னுடைய தாலி, மோதிரத்தை சூட்கேஸிலேயே வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.. அறையை போலீசார் சோதனை செய்தபோது, இந்த தாலி, மோதிரம்தான் அவரை காட்டி தந்துள்ளது.. அத்துடன், சுற்றுலா வழிகாட்டியின் வாக்குமூலமும் இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக அமைந்தது.
பகீர் நம்பர் 5
கூலிப்படையினர் உதவி இல்லாமல், ஹனிமூன் கிளம்புவதற்கு முன்பே கணவரை கொலை செய்ய பலமுறை முயன்றாராம் சோனம்.. 3 முறை கொலை திட்டம் தீட்டியும் அது நடக்காத நிலையில், 4ஆவது முறைதான் ராஜாவைக் கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்திருக்கிறார்..
சிரபுஞ்சி மலையில், தன்னுடைய கணவரை கோடாரியால் வெட்டுவதை, மறைந்து நின்று பார்த்து ரசித்தாராம் சோனம்.. அதற்கு பிறகுதான், ஓடிவந்து சடலத்தை அப்புறப்படுத்த உதவி உள்ளார்.
சம்பவத்தின் தாக்கங்கள்
இந்த ஹனிமூன் கொலை சம்பவமானது, இந்தியாவையே உலுக்கிவிட்டது.. இதன் அதிர்ச்சி ஒருபுறமிருந்தாலும், அந்த நேரத்தில் திருமணம் செய்த மணமகன்களுக்கு கிலியை தந்துவிட்டது.. வடமாநிலங்களில் பலரும் தங்கள் மனைவியை ஹனிமூன் அழைத்து செல்லவே பயந்தனர்.. ஒருவர், தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஹனிமூன் பிளானை கேன்சல் செய்தார்.
அதிலும், உ.பி. மாநிலத்தை சேர்ந்த சுனில் என்ற மணமகன், ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தார்.. இவருக்கு குஷ்பு என்ற பெண்ணுடன் திருமணமாகி 9 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது..
அப்போது திருமண சடங்குக்காக, தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றார் குஷ்பு.. ஆனால் அங்கே சென்றதுமே, ஏற்கெனவே தான் காதலித்த காதலனோடு வீட்டை விட்டே ஓடிவிட்டார்.. இது தெரியாமல் சுனில், மனைவி குஷ்புவை காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்.. அப்போது குஷ்பு தன்னுடைய காதலனுடனேயே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்..
கணவர் சுனிலை தனக்கு பிடிக்கவில்லை என்றும், காதலனோடு சென்று வாழ விருப்பம் என்றும் சொன்னார்..
கிரேட் எஸ்கேப் சுனில்
சிறிது நேரம் யோசித்த சுனில், இறுதியில் தன்னுடைய மனைவியின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்.. தன்னுடைய காதலனுடனேயே குஷ்பு சென்று சந்தோஷமாக வாழட்டும் என்று போலீசாரிடம் சொன்னார். பிறகு கல்யாணத்துக்கு போடப்பட்ட நகைகள் அனைத்தையும் சுனில் குஷ்புவிடமே திருப்பி தந்துவிட்டார்.. அந்த நகைகளை பெற்றுக் கொண்டு, காதலனுடன் கிளம்பி சென்றுவிட்டார் குஷ்பு.
இது குறித்து சுனில் சொல்லும்போது, "குஷ்புவுடன் ஹனிமூன் போகலாம் என்றெல்லாம் கனவு கண்டிருந்தேன்.. அதுவும் நைனிடாலுக்கு கூட்டிச்சென்று சர்ப்ரைஸ் செய்யலாம் என்று நினைத்தேன். அதற்குள் இப்படி நடந்துவிட்டது.
நல்லவேளை, ஹனிமூனில் உயிரிழந்த இன்னொரு ராஜா ரகுவன்ஷியாக நான் ஆகவில்லை.. ஹனிமூன் போகாமல் நான் உயிரோடு பிழைத்துள்ளேன்" என்று கூறியிருந்தார்.
ஆக, இந்த வருடம் நடந்த ஹனிமூன் கள்ளக்காதல் கொலையானது, இந்தியாவின் பல நகரங்களில் இப்படியான தாக்கத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்திவிட்டு சென்றதை யாராலும் மறுக்க முடியாது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications