ஆம் ஆத்மி கட்சி சார்பில் தமிழகத்தில் துடைப்பம் யாத்திரை... டிசம்பர் 13-ல் மதுரையில் தொடங்குகிறது..!
சென்னை: ஆம் ஆத்மி கட்சி சார்பில் வரும் 13-ம் தேதி மதுரையில் துடைப்பம் யாத்திரை தொடங்கப்படவுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவர் வசீகரன் தலைமையில் தொடங்கும் இந்த யாத்திரை ஊழலை ஒழிப்பதற்கானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ல் தமிழகத்தில் நல்லாட்சியை அமைப்போம் என்பதை கொள்கை முழக்கமாக கொண்டு இந்த யாத்திரை நடத்தப்படவுள்ளது.

மதுரையில் தொடங்கும் துடைப்பம் யாத்திரை தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்கள் வழியாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே காவல்துறை தரப்பில் ஆம் ஆத்மி தொடங்கும் துடைப்பம் யாத்திரைக்கு இன்னும் அனுமதி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருவதால் திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பரப்புரையை தொடங்கிவிட்டன. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியினரும் தங்கள் பங்குக்கு துடைப்பம் யாத்திரையை தொடங்க உள்ளார்கள்.
இதில் குறிப்பிடவேண்டியவை என்னவென்றால் ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்ப என்பதால் அந்தக் கட்சியினர் தங்கள் கட்சி சின்னத்தின் பெயரில் யாத்திரை நடத்தவுள்ளார்கள். இதனிடையே இந்த யாத்திரைக்கு அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி அளித்துள்ளார்.
கொரோனா கால பாதுகாப்பு அம்சங்களை உரிய முறையில் கடைபிடித்து துடைப்பம் யாத்திரையை நடத்துவோம் என ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது நண்பர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிப்பாரா அல்லது தனது தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வேண்டுகோளை ஏற்று திமுகவுக்கு ஆதரவு நல்குகிறாரா என்பது பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications