ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கை கோர்த்த எதிரிகள்.. 5,000 பக்க குற்றப்பத்திரிகை சொல்வது என்ன? பார்ட் 2
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் போலீசார் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் எப்படி அரசியல் தலைவராக உருவெடுத்தார்? ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பின்னணி என்ன? ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் எப்படி இந்த படுகொலையை அரங்கேற்றினர்? என்கிற அதிர்ச்சி விவரங்களை இந்த 5,000 பக்க குற்றப்பத்திரிகை விவரிக்கிறது.
(முதல் பாகத்தின் இறுதி) ஆற்காடு சுரேஷ்- நாகேந்திரன் - அஸ்வத்தாமன் - சம்பவம் செந்தில் ஆகியோருக்கு பொதுவான எதிரியாகிறார் ஆம்ஸ்ட்ராங். ஒரு கட்டத்தில் சிறையில் இருந்து நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டுத் தர வெளிநாடுகளில் இருந்து சம்பவம் செந்தில் அதனை தமிழ்நாட்டில் அரங்கேற்ற இந்த கூட்டணி வலிமையான ஒன்றாகிவிட்டது. ஆம்ஸ்ட்ராங் மீது இந்த கேங் கோபம் கொப்பளிக்க 'காலம் வரட்டும்' என காத்திருந்தனர்.

ஆற்காடு சுரேஷ் படுகொலை: 2023-ம் ஆண்டு நடந்த சம்பவம்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான முதல் புள்ளியைப் போட்டது. ஆம் அது ஆற்காடு சுரேஷ் கொலை. தென்னரசு படுகொலைக்காக ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்தது ஒற்றைக் கண் ஜெயபால். ஆற்காடு சுரேஷை ஜெயபால் போட்டுத் தள்ளியபோது ஆம்ஸ்ட்ராங் காரில் இருந்ததாக சுரேஷ் தரப்பு நம்பியது.
ஆம்ஸ்ட்ராங்குக்கு பொன்னை பாலு ஸ்கெட்ச்: தற்போது ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிராக ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலுவின் தலைமையில் வழக்கறிஞர் அருள் உட்பட ஒரு குழு களமிறங்குகிறது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து பழிதீர்க்க இந்த குழு திட்டமிடத் தொடங்கியது.
கை கோர்த்த எதிரிகள்: இந்த தகவல் ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங்கை பழிதீர்க்க காத்திருந்த நாகேந்திரன் - அஸ்வத்தாமன் -சம்பவம் செந்தில் தரப்புக்கு கிடைக்கிறது. இப்போது அத்தனை எதிரிகளும் கை கோர்க்க முடிவு செய்கின்றனர்.
அடுத்தடுத்த சந்திப்புகள்: இதன் முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் அஸ்வத்தாமனை அவரது வீட்டில் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு பிரதிநிதியாக வழக்கறிஞர் அருள் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். 2-வது கட்டமாக சிறையில் இருந்து சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்று திரும்பிய ரவுடி நாகேந்திரனுடன் வாலஜாபாத் அருகே ஹோட்டல் ஒன்றில் சந்திப்பு நடைபெறுகிறது. அங்கு நாகேந்திரன் - அஸ்வத்தமான இருவரும் அருளுடனான சந்திப்பு குறித்து விவாதித்தனர். பின்னர் அருளுடன் அங்கிருந்து நாகேந்திரன் செல்போனில் தொடர்பு கொண்டு, போட்டுத் தள்ளுங்க.. பணத்தை நாங்க தருகிறோம் என உறுதி அளிக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கதையை முடிக்கும் திட்டத்தை அரங்கேற்றுவது குறித்து வெளிநாட்டில் பதுங்கி இருந்த சம்போ செந்திலுக்கு நாகேந்திரன் தரப்பு தெரிவிக்கிறது.

களத்துக்கு வந்த சம்போ செந்தில்: வெளிநாட்டில் இருந்த சம்போ செந்தில், தமது கூட்டாளியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் ஹரிஹரனுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளின் முடிவில் தொடக்கமாக ரூ4 லட்சம் பணம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் உயிர் தப்பிவிடவே கூடாது என்பதற்காக நாட்டு வெடிகுண்டுகள் கைமாறின. சம்போ செந்திலின் கூட்டாளி புதூர் அப்புதான் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கோடம்பாக்கத்தில் குடோன் ஒன்றில் பதுக்கி வைத்தார்.
பகுதி 1:ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்- அதிர வைக்கும் 5,000 பக்க போலீஸ் குற்றப்பத்திரிகை-1
கஞ்சாலை அஞ்சலையும் மலர்க்கொடியும்: இப்போது ஆம்ஸ்ட்ராங் சதித் திட்டத்தில் புளியந்தோப்பு கஞ்சா அஞ்சலையும், தோட்டம் மலர்க்கொடியும் இணைகின்றனர். தமது கள்ளக்காதலான் ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொல்லப்பட்ட பிறகு 'கஞ்சா' விற்பனை தொழிலில் ஆம்ஸ்ட்ராங் தரப்பால் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தார் கஞ்சா அஞ்சலை. இதனால் 'கொலை வெறியில்' இருந்தார் அஞ்சலை. சம்போ செந்திலின் கூட்டாளியின் தோழிதான் வழக்கறிஞர் தோட்டம் மலர்க்கொடி. அஞ்சலையும் மலர்க்கொடியும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பணப் பரிமாற்றங்களில் உடந்தையாக செயல்பட்டிருக்கின்றனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications