புதுவையில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா? புஸ்ஸி ஆனந்த் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: புதுவையில் வரும் 5 ஆம் தேதி விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு தவெகவினர் காவல்துறையினரிடம் மனு அளித்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் அனுமதி பெறுவதற்காக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி மீண்டும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் எதுவும் நேரடியாக அளிக்காமல் சிரித்தவாறே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வந்தார். கரூர் வேலுசாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை ஒத்தி வைத்தார். கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் பாதுகாப்பு படை என்ற தொண்டர் படையை புதிதாக உருவாக்கினார். இவர்களுக்கு கூட்டநெரிசலை கட்டுப்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதன்பிறகு விஜய் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி வரும் 4 ஆம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்த த.வெ.க. சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தான் புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டார். காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் புதுவை காவல்துறையிடம் அனுமதி கடிதம் அளித்தனர்.
ஆனால் புதுவை போலீசார் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை தவெகவினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அப்போது அனுமதி கிடைத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் தான் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீண்டும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தார்.
5 ஆம் தேதி விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் இன்னும் காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைக்காமல் இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்த புஸ்சி ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அனுமதி கிடைத்ததா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் எதுவும் நேரடியாக அளிக்காமல் சிரித்தவாறே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications