Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இயேசு கிறிஸ்து மீது ஆணையாக.. சீமான் இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்றாரே? நாம் தமிழர் கட்சிக்கு செம தில்லு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 70 வருடங்களாக அமையாத கூட்டணி ஆட்சி 2026ல் அமைய வாய்ப்புள்ளதா? தெரியவில்லை.. காங்கிரஸ் திமுக கூட்டணியிலும் சரி, தவெக - அதிமுக கூட்டணி அமைந்தாலும் சரி, கூட்டணி ஆட்சி என்ற பேச்சு நிச்சயம் வலுக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. இப்படிப்பட்ட சூழலில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய கூட்டணி நிலைப்பாடு குறித்து கூறியிருக்கிறார்.

தமிழக அரசியலே பரபரத்து காணப்படுகிறது.. கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் தாண்டி, தங்களது தனித்தன்மையை நிரூபிக்கவும், கட்சியை வலுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளையும் அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

Seeman Jesus Christ NTK

அந்தவகையில், திமுகவும் தயாராகி வருகிறது. அதிமுகவும் தயாராகி வருகிறது. விஜய் தலைமையில் தவெகவின் வருகையானது, தமிழகத்தில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் நிலையில், இருபெரும் திராவிட கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி என்பதை அழுத்தி சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அதிமுக - விஜய்

ஏற்கனவே அதிமுக பாஜகவும் கூட்டணியில் உள்ள நிலையில், விஜய்யும் அவர்களுடன் இணையக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.. ஒருவேளை விஜய்யுடன் சீமான் சேருவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால் இதற்கு சீமானே ஒருமுறை பதிலளித்திருந்தார். ஒரு நடிகரின் ரசிகராக இருப்பவர்கள் என்னிடம் வரமாட்டார்கள். பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடுபவர்கள் என்னை தேடமாட்டார்கள்.

விஜய்யுடன் செட் ஆகாது

போராட்டக்களத்தில் தலைவனை தேடுபவர்கள் மட்டுமே என்னுடன் இருப்பார்கள்.ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோதே நான் செல்லவில்லை. ஆகவே விஜய்யுடன் கூட்டணி எனக்கு சரிவராது என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார் சீமான்.

அதுமட்டுமல்ல எப்போதுமே தனித்துதான் போட்டியிடுவோம் என்றும் தொடர்ந்து சொல்லி வருகிறார் சீமான், "ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். இது இன்றைக்கு, நேற்று அல்ல. நீண்ட காலமாக அழைப்பு விடுப்பார்கள். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். திரும்ப திரும்ப சொல்வதற்கு ரொம்ப ஒரு மாதிரியாக இருக்கிறது. அதையே திரும்ப திரும்ப பதிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது.

பெண்களுக்கு வாய்ப்பு

கூட்டணிக்கு அழைக்கிறாங்க, அதற்கு எங்களது நன்றி. ஆனால் எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான். கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. தேர்தல், கட்சி அரசியல் செய்யும் கட்சிகளுக்கு தான் கூட்டணி முக்கியம், நாங்கள் மக்கள் அரசியல் செய்கிறோம். நாங்கள் மக்களோடு சேர்ந்து தான் தேர்தலை சந்திப்போம்.

5வது முறையாக தனித்து ஒரு கட்சி போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சியாக தான் இருக்கும். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். 117 பெண்களுக்கும், 117 ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுப்பேன். அடுத்தவர்களை நம்பி பயணத்தை தொடங்கினால் இலக்கை அடைய முடியாது. தனித்து தான் போட்டியிடுவேன். வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி நாங்கள்தான்" என்று சீமான் திடமாக கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இயேசு கிறிஸ்து ஆணையாக

இந்நிலையில், அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளில் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் ஒரே கட்சியாக உள்ளது..

இப்போதும் சொல்கிறேன், யாருடனும் கூட்டணி கிடையாது. எந்த காலத்திலும் தனித்தே போட்டியிடுவோம். இறைமகன் இயேசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது. பிறர் தோள் மீது ஏறி நின்று எங்கள் உயரத்தை காட்ட நாங்கள் விரும்பவில்லை" என்று மீண்டுமொரு முறை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+