கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கத்தில் இடை தேர்தல்! ஆளுங்கட்சிக்கு ஷாக் கொடுத்த எதிர்க் கட்சிகள்
டெல்லி: கேரளா, குஜராத்,பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அங்கு நிலம்புரில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், குஜராத் மாநிலத்தின் விஸ்வாதரிலும், பஞ்சாப் மாநிலம் மேற்கு லுதியானாவில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தின் காடி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.
கேரளாவில் நிலம்பூர், மேற்கு வங்க மாநிலத்தில் காலிகஞ்ச், பஞ்சாப் மாநிலத்தில் மேற்கு லூதியானா, குஜராத்தில் விசாவதர், காடி ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஆனது கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
கேரளாவின் நிலம்புரில் சுயேச்சை எம்எல்ஏவான பிவி அன்வர், குஜராத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பூபேந்திர பயாணி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். காலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ நசிருதீன் அகமது, மேற்கு லூதியானாவில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் பஸ்ஸி, காடி தொகுதியில் பாஜக எம்எல்ஏ கர்சன் சோலங்கி ஆகியோர் மறைந்ததால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில அசம்பாவிதங்களை தவிர பெரும்பாலும் அமைதியாகவே வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6:00 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிகபட்சமாக கேரளா மாநிலம் நிலம்பூர் தொகுதியில் 73 சதவீத வாக்குகள் பதிவானது. மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் காலிகட் தொகுதியில் 69.85% வாக்குகளும், பஞ்சாப் மாநிலம் மேற்கு லூதியானாவில் 51.33 சதவீத வாக்குகளும், குஜராத் மாநிலம் காடியில் 64 சதவீத வாக்குகளும், விசாவதரில் 55 சதவீத வாக்குகளும் பதிவானது.
இந்த தேர்தலில் தான் முதல் முறையாக வாக்காளர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களை வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்து செல்லும் விதி அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது
கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல், குஜராத்தில் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இந்த தேர்தல் ஒரு பரிட்சை போலவே பார்க்கப்படுகிறது. விரைவில் அங்கெல்லாம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இடைத்தேர்தல் முடிவுகளை ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஆர்வத்தோடு எதிர்நோக்கின.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஆரம்பத்திலேயே யார் பக்கம் வெற்றி என்பது தெரிந்து விட்டது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. பஞ்சாபில் ஆளுங்கட்சியாக ஆம் ஆத்மி இருக்கும் நிலையில் நடைபெற்ற மேற்கு லூதியானா தொகுதிக்கான இடைத்தேர்தலில் அக்கட்சியே வெற்றி பெற்றது.
அதிர்ச்சி அளிக்கும் விதமாக குஜராத்தின் விஸ்வகர் தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் காட் தொகுதியில் பாஜக வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்தது.
கேரள மாநிலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலம்புர் தொகுதியில் ஆளும் கட்சிக்கு தோல்வியே கிடைத்துள்ளது. அங்கு ஆளும் எல்டிஎஃப் கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஸ்வராஜை விட காங்கிரஸ் கட்சியின் ஆர்யதன் சவுகத் சுமார் 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 77 ஆயிரம் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications