பிளேட்டை திருப்பிய எடப்பாடி பழனிசாமி? சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு + ஸ்டிரைக்.. டக்னு திரும்பிய திமுக
சென்னை: சிஏஏ சட்டத்துக்கு அதிமுக கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.. இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுகவும் ஜனநாயக ரீதியாக போராடும் என்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.. உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலையும் இந்த சட்டம் பெற்றது. ஆனாலும், சிஏஏ சட்டத்திற்கு போதுமான ஆதரவு பொதுமக்களிடம் கிடைக்கவில்லை..

விதிகள்: இந்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.. இதனால், இந்த சட்டத்தை மத்திய அரசால் அமலுக்கு கொண்டுவர முடியவில்லை.. இதுவரை விதிகள் அறிவிக்கப்படாததால், சட்டமும் அமலுக்கு வரவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், நேற்றைய தினம், சிஏஏ சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிக்கையை, அரசிதழிலும் வெளியிட்டிருந்தது..
தேர்தல் ஆரம்பிக்கும் நேரத்தில், சிஏஏ சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது, மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் பல்வேறு தரப்பில் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின்: தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதை கண்டித்துள்ளார். "அமைதியான இந்தியாவில் பிளவுகளை ஏற்படுத்தும் சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்த பாஜகவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.கவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்று கொந்தளித்துள்ளார். சிஏஏ சட்டம் கொண்டுவரப்பட காரணமே அதிமுகதான் என்றும் சீறியிருக்கிறார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, அதிமுகவும் இந்த சிஏஏ சட்டத்தை எதிர்த்துள்ளது.. சிஏஏ அமல்படுத்தப்பட்டதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அறிவிப்பு: இது தொடர்பாக எக்ஸ் தளத்தில், "பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிஏஏ சட்டம் 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்) இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றே அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டம் அம்லபடுத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.
எடப்பாடி பழனிசாமி: இதன் மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது. அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுகவும் ஜனநாயக ரீதியாக போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
சிஏஏ சட்டத்துக்கு அதிமுக தந்த ஆதரவுதான் காரணம் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும்போது, எடப்பாடி பழனிசாமியின் இந்த நிலைப்பாடு மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது. அன்று ஆதரவு தெரிவித்துவிட்டு, இன்று எதிர்ப்பது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் அதிமுகவை விமர்சிக்க துவங்கியிருக்கின்றன.
சிறுபான்மையினச் சகோதர, சகோதரிகள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், ஆளுநரைச் சந்தித்து இஸ்லாமியர் சிறைவிடுதலை குறித்து அழுத்தம் தர அதிமுகவினர் தயாராக இருக்கிறார்களா?" என்று அன்றே திமுக கேள்வியிருப்பியிருந்த நிலையில், தற்போது இந்த சட்டத்தை கண்டித்திருப்பதில் உள்ள அரசியலை, இஸ்லாமிய மக்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications