சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரெடியா இருங்க.. கண்ணசைத்த பாஜக.. "தூக்குங்க" அவரை.. சசிகலா சந்தித்த பெரிய புள்ளி.. எல்லாமே கைகூடுதே

சசிகலாவுக்கு பாஜக மேலிடத்தில் இருந்து பாசிட்டிவ் மெசேஜ் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: இத்தனை நாளும் சசிகலா மேற்கொண்ட முயற்சிக்கு, ஒரு நல்ல ரிசல்ட் தென்பட துவங்கி உள்ளது.. முக்கியமாக, டெல்லி பாஜகவிடம் இருந்து பாசிட்டிவ் மெசேஜ் ஒன்று கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

உண்மையை சொல்ல போனால், மறைந்த ஜெயலலிதாவைவிட அதிரடியை கிளப்ப கூடியவர் சசிகலாதான்.. 30 வருடமாக ஜெ.விடம் லாபி செய்து கொண்டிருந்த சசிகலாவின் ஆளுமை பற்றி பொதுமக்களுக்கு தெரியாமல் போனால், அதிமுக நிர்வாகிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

வேகம், துடிப்பு, சமயோஜிதம் இத்தனையும் கலந்த சசிகலாவின் அரசியல் இப்போது தலைகீழாக மாறிவிட்டது.. ஜெயிலில் இருந்து வெளிவரும்போதே பக்குவம் நிறைந்தவராகவும், பொறுமை, அரவணைப்பு மிக்க நபராகவும் தன்னை வெளிப்படுத்தி கொண்டு வருகிறார்..

செம ட்விஸ்ட்.. சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் ஒரே அணியில்.. ஓ.பி.ரவீந்திரநாத் ஒரே போடு!செம ட்விஸ்ட்.. சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் ஒரே அணியில்.. ஓ.பி.ரவீந்திரநாத் ஒரே போடு!

 ட்விஸ்ட் 1

ட்விஸ்ட் 1

ஆனால் அளவுக்கு மீறி பொறுமையை கடைப்பிடித்து விட்டாரோ என்னவோ, நடந்து கொண்டிருக்கும் அதிமுக களேபரங்களில் காணாமலேயே போய்விட்டார்.. கட்சி தன் கைக்கு வரும் என்று நம்பிக் கொண்டு, பொதுச்செயலாளர் என்று இன்னமும் தனக்கு தானே சொல்லி கொண்டு வரும் நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் சசிகலாவே எதிர்பார்க்காத ட்விஸ்ட்தான்.. ஆனால், அதிமுகவுக்கு யார் தலைமை வகித்தாலும் பாஜகவின் ஆதரவை பெறுவதுதான் முக்கியம் என்பதை, சசிகலா முன்கூட்டியே உணர்ந்திருந்தார்..

 ட்விஸ்ட் 2

ட்விஸ்ட் 2

அதனால்தான், பாஜகவின் கரிசனம் தன்மீது விழும்படியான முயற்சிகளையும் கடந்த டிசம்பர் மாதத்திலேயே சசிகலா முன்னெடுத்தார். இதற்காக, ரஜினிகாந்த்தை போயஸ் கார்டன் வீட்டில் நேரிலும் சந்தித்து பேசினார் சசிகலா.. தாதா பால்கே விருது வாங்கியதால், ரஜினியை வாழ்த்த சென்றதாக காரணம் மேலோட்டமாக சொல்லப்பட்டாலும், சசிகலா ரஜினியை சந்திக்க காரணமே அரசியல்தான் என்பதை இந்த தமிழகமே அறிந்திருந்தது.. மேலும், இந்த சந்திப்பு பற்றி ஒருசில உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் கசிந்தன.. அதாவது, ரஜினியை சந்திக்க வேண்டும் என்று, லதா ரஜினிகாந்துக்கு போன் போட்டு அபாய்ன்ட்மென்ட் வாங்கி சென்றுள்ளார் சசிகலா..

 ட்விஸ்ட் 3

ட்விஸ்ட் 3

ரஜினியிடம் "அதிமுகவுக்கு இப்போதைக்கு ஆதரவு இருந்தாலும், தேர்தலில் எப்படியும் ஜெயிக்க முடியாது, அதனால், இந்த நிலைமையை பாஜக தலைமையிடம் எடுத்து சொல்லுங்கள், எனக்கு ஆதரவு தரச்சொல்லுங்கள், வரும் எம்பி தேர்தலில் அதிக எம்பிக்களை வெற்றி பெற வைத்து காட்டுகிறேன், எனக்காக மேலே பேச வேண்டும்" என்று சசிகலா கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு ரஜினி எடுத்த எடுப்பிலேயே "ஸாரி" சொல்லி மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டன..

 ட்விஸ்ட் 4

ட்விஸ்ட் 4

அதுமட்டுமல்ல, ரஜினி முடிவால் சசிகலா அப்செட்டாகவும், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சசிகலாவை இருக்கச் சொல்லிவிட்டு, ரஜினியிடம் பேசிவிட்டு பிறகு மீண்டும் கீழே வந்த லதா, "கவலைப்படாதீங்க.. தைரியமாக அரசியல் வேலையை பாருங்க. அவரை சமாதானப்படுத்தி அமித்ஷாவிடமும், மோடியிடமும் பேசச்சொல்கிறேன்" என்று உறுதி தந்தாராம் லதா ரஜினிகாந்த்.. இப்படியெல்லாம் செய்திகள் வந்தநிலையில், அதற்கு, சசிகலாவின் முயற்சி குறித்தும் தெரியவில்லை.. ரஜினியும் கப்சிப்பென்று ஆகிவிட்டார்.

 ட்விஸ்ட் 5

ட்விஸ்ட் 5

இப்போது அதிமுகவே ரணகளத்தில் இருக்கும்போது, 2 தலைவர்களும் ஆளுக்கு ஒருபக்கம் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில், ரஜினி ஆளுநர் ரவியை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.. ஆன்மீக அரசியலை கொண்டுவருவது பற்றி எடுத்துக்கூறிய ரஜினி, தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டுமானால், அதிமுக பிரிந்திருப்பது நல்லதல்ல, அதனால், எடப்பாடி + ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைக்க வேண்டும், அப்படி இணைத்து அதை ஆன்மீக அரசியலாக்கினால்தான் பாஜகவுக்கு தமிழகத்தில் வரவேற்பு கிடைக்கும் என்று ஆலோசனை சொன்னாராம் ரஜினி..

 ட்விஸ்ட் 6

ட்விஸ்ட் 6

அன்று சசிகலா, தன்னிடம் சிபாரிசு கேட்டிருந்த நிலையில், இப்படி ஒரு யோசனையை ரஜினி கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த விஷயம் டெல்லிக்கும் பறந்துள்ளது.. இதனிடையே ஆகஸ்ட் 18ம் தேதி தன்னுடைய பிறந்தநாளின்போது, சென்னையில் ஒரு வீட்டில், தென்மண்டலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரை சந்தித்து பேசினாராம் சசிகலா. தேர்தலில் போட்டியிடமாட்டேன், ஆனால், கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்தால், நிச்சயம் வெற்றி பெற வைப்பதாகவும், பாஜக வேட்பாளர்களின் செலவுகளையும் தானே பார்த்துக் கொள்வதாகவும் நம்பிக்கை கூறியுள்ளார்..

 ட்விஸ்ட் 7

ட்விஸ்ட் 7

இந்த விஷயம் மேலிடத்துக்கு பாஸ் செய்யப்பட்டுவிட்டநிலையில், அவர்களும் இந்த டீலுக்கு ஓகே சொல்லிவிட்டார்களாம்.. எடப்பாடியின் ஆளுமையை டெல்லி விரும்பாத நிலையில், சசிகலா தலைமையிலேயே கட்சி ஒருங்கிணையட்டும் என்று க்ரீன் சிக்னல் காட்டி உள்ளதாம்.. கடந்த டிசம்பரில் சசிகலா எடுத்த முயற்சிக்கு இப்போது நல்ல தீர்வு எட்டி வருவதாக கூறப்படுகிறது.. ஆக, விரைவில் அனைவரும் ஒன்றிணைய போகிறார்கள் என்றாலும், ரஜினிக்கு இதில் ரோல் என்ன? ஆன்மீக அரசியலை யார் முன்னெடுக்க போவது யார்? என்று தெரியவில்லை.. அப்ப எடப்பாடி?

English summary
Can AIADMK function without Edappadi palanisamy and whats Sasikalas next political plan சசிகலாவுக்கு பாஜக மேலிடத்தில் இருந்து பாசிட்டிவ் மெசேஜ் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X