சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நேம்சேஞ்ச் + கேம்சேஞ்ச்".. "கிளைமேட்டே" மாறிடுச்சே.. லாஸ்ட்ல இதான் நடக்க போகுதாம்.. அசராத எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி அல்லாத கூட்டணிக்கு பாஜக தயாராகி வருகிறதா என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக இணைய வேண்டும் என்று, பாஜக, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒருமித்த டோனில் வெளிப்படுத்த துவங்கி உள்ளனர்.. இதில் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்க போகிறார்? பாஜக அல்லாத கூட்டணிக்கு தயாராகிறாரா? என்ற சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பாஜக போட்டியிட போகிறதா? இல்லையா? ஓபிஎஸ், எடப்பாடி இருவரில் யாருக்கு தன்னுடைய ஆதரவை தரப்போகிறது? என்ற கேள்விகள்தான், இந்த ஒரு வார காலமாகவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தன.

ஆனால், கடந்த 2 நாட்களாகவே, அதிமுக - பாஜக இரு தரப்பிலும் நிறைய பரபரப்புகள் காணப்பட்டு வருகின்றன.. நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருபுறம், தேர்தல் ஆணைய வழக்குகள் மறுபுறம், இதற்கு நடுவில் தலைவர்களின் திடீர் சந்திப்புகள் என களம் அனலடித்து கிடக்கிறது.

திமுகவை வீழ்த்த.. அதிமுக ஒன்று சேர்ந்தேயாகனும்.. அண்ணாமலையுடன் சேர்ந்து சிடி ரவி அளித்த கறார் பேட்டி திமுகவை வீழ்த்த.. அதிமுக ஒன்று சேர்ந்தேயாகனும்.. அண்ணாமலையுடன் சேர்ந்து சிடி ரவி அளித்த கறார் பேட்டி

மொத்த குறி

மொத்த குறி

பாஜக தரப்பு அதிமுகவை சந்தித்து பேசினாலும், இந்த விவகாரத்துக்குள் இருவேறு சூழல்கள் நிலவிவருவதை கவனிக்க முடியாது.. அந்தவகையில், எடப்பாடி டீம் + ஓபிஎஸ் டீம் என இரண்டாக பிரித்து அலசப்பட வேண்டி உள்ளது. நடக்க போகும் இடைத்தேர்தல் பாஜகவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை.. அவ்வளவு ஏன், அது அதிமுகவுக்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படவில்லை.. எடப்பாடியின் குறி மொத்தமும் சட்டசபை தேர்தலை நோக்கியே அமைந்து வருகிறது.. ஆனால், விரைவில் நடக்க உள்ள எம்பி தேர்தல் பாஜகவுக்கு மிக மிக முக்கியமானதாகும்..

டீம் மீட்டிங்

டீம் மீட்டிங்

தமிழகத்தில் குறிப்பிட்ட சீட்டுக்களை பெறுவதற்கு, அதிமுகவின் பலம் அத்தியாவசியமாக உள்ளது.. அதனால், பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க, கடந்த 6 மாத காலத்துக்கும் மேலாகவே மறைமுகமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. பாஜக மேற்கொண்ட அந்த ஒவ்வொரு முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்காமல் நழுவி சென்று கொண்டே வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், இடைத்தேர்தலை சாக்காக வைத்து, அதிமுகவின் ஆதரவை நாடி பாஜக இன்றைய தினம் காய்நகர்த்தி உள்ளது.. எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சென்று அண்ணாமலை டீம் சந்தித்த அதேநேரத்தில், அங்கிருந்து புறப்பட்டு ஓபிஎஸ்ஸையும் சென்று சந்தித்துள்ளது.

சிறுபான்மை ஓட்டு

சிறுபான்மை ஓட்டு

அநேகமாக இரு தரப்பையும் சமாதானம் செய்யவே பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவுக்கு வெளிப்படையாகவே "நோ" சொல்லும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதை இன்றைய பொன்னையன் பேட்டியில் இருந்தே பார்க்க முடிகிறது.. பாஜக வட இந்தியாவில் கூட்டணி கட்சிகளை எவ்வாறு வீழ்த்தி ஆட்சிக்கு வந்தனர் என அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்று வெளிப்படையாகவே சொல்லி உள்ளார்..

"நோ" எடப்பாடி

சுருக்கமாக சொல்லப்போனால், எடப்பாடிக்கு ஓபிஎஸ் தேவையில்லை... அப்படி இணைத்தால் அவரது முக்கியத்துவம் போய்விடும்... அதனால் தோற்றாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்.. ஆளும் கட்சிதான் இடைத் தேர்தலில் ஜெயிக்கும் என்பதால், தன் தரப்பு தோற்பதையும் நியாயப்படுத்தி தப்பித்து கொள்ள எடப்பாடியால் முடியும்.. அதற்காக தேர்தலை காரணமாக வைத்து யாரையும் கிட்ட சேர்க்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இப்போது, இந்த இடைத்தேர்தலுக்காக விட்டுக்கொடுத்து போனால், இனி அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயத்திலும் விட்டுக்கொடுத்து போக வேண்டி வரும் என்பதாலேயே ஒன்றுபட்ட அதிமுகவிற்கு "நோ" என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டதாக தெரிகிறது..

+ பாயிண்ட்ஸ்

+ பாயிண்ட்ஸ்

எடப்பாடியின் இந்த தொடர் பிடிவாதத்தை கவனித்து வரும் பாஜகவும், ஒரு அளவுக்கு மேல் இந்த விஷயத்தில் தலையிட வாய்ப்பிருக்காது என்கிறார்கள்.. அப்படி பாஜக ஒதுங்கி கொண்டால், அதையும் தனக்கு பிளஸ் பாயிண்ட்டாகவே எடப்பாடி பழனிசாமி எடுத்து கொள்வார்.. காரணம், கைவிட்டு போன சிறுபான்மையினர் வாங்குகள் மீண்டும் வந்து சேரும் என்று நம்புகிறார். அந்தவகையில், பாஜக+ஓபிஎஸ் டீமை கழட்டிவிட எடப்பாடி துணியும் சூழலில், எடப்பாடி அல்லாத ஒரு டீம் தனியாக உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.. இதில் ஓபிஎஸ்ஸின் நிலைப்பாட்டை நன்றாக கவனிக்க வேண்டி உள்ளது..

B பார்ம்

B பார்ம்

இரட்டை இலை சின்னம் முடக்கத்திற்கு தான் காரணம் இல்லை என்பதை திரும்ப திரும்ப நினைவுபடுத்தி வருகிறார்... மற்றொருபுறம், எடப்பாடியுடன் கைகோர்த்து செல்ல தயார், பி பார்மில் கையெழுத்தும் போட தயாராக இருந்தேன் என்றெல்லாம் சொல்லி, தொண்டர்களின் அனுதாபத்தை திருப்ப முயன்று வருகிறார்.. அதேசமயம், பாஜகவுக்கான முக்கியத்துவத்தையும் தன்னுடைய ஒவ்வொரு பேச்சிலும் வெளிப்படுத்தி வருகிறார்.. பாஜக வேட்பாளரை நிறுத்தினால் தன்னுடைய வேட்பாளரை வாபஸ் வாங்கி கொள்வேன், பாஜகவிற்கு ஆதரவு அளிப்பேன், என்றெல்லாம் தொடர்ந்து சொல்லி வருகிறார்..

பாஜக பிம்பம்

பாஜக பிம்பம்

எடப்பாடி பழனிசாமி, எப்படியும் தன்னை சேர்க்க போவதில்லை என்ற முடிவுக்கு கிட்டத்தட்ட ஓபிஎஸ்ஸும் வந்துவிட்டதாக தெரிகிறது.. இதனால் ஓபிஎஸ்ஸுக்கு பெரிதாக நஷ்டம் இருக்காது, இரட்டை இலை முடங்கி விடும் என்றாலும், அதிமுகவை கைப்பற்ற பாஜகவுடன் சேர்ந்து வேறு கணக்குகளை போடக்கூடும்... அல்லது பாஜகவில்கூட கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்கிறார்கள். அதேபோல, டிடிவி தினகரனை பொறுத்தவரை பாஜகவின் சாயலாக ஒலித்து வருவதாக சொல்கிறார்கள்.. மேலும், ஓபிஎஸ் மீதான ஆதரவும் வெளிப்படையாகவே கூடி வருகிறது..

வெளுக்குது சாயம்

வெளுக்குது சாயம்

நேற்றைய தினம் ஈரோட்டில் டிடிவி தினகரன் பேசும்போது, "இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும், ஒருசிலரின் சுயநலத்தால் அதிமுக பலவீனமடைந்து எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது, திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நாங்கள் சொல்வதையே, ஓபிஎஸ்ஸும் சொல்லி வருகிறார்" என்று வெளிப்படையாகவே சொல்லி உள்ளார்.. விகே சசிகலாவும் இதே மனநிலைமையில்தான் உள்ளார். சசிகலாவை சந்தித்து ஆதரவு கேட்க போவதாக ஓபிஎஸ் சொல்லி வரும்நிலையில், இந்த சந்திப்பு விரைவில் நடக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. அதாவது, பாஜக குரலிலேயே சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் பேசி வரும் நிலையில், வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமி மட்டும் அசராமல் உள்ளார்... ஆக, பாஜக அல்லாத கூட்டணி என்ற புள்ளியை நோக்கி எடப்பாடி பழனிசாமி நகர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது..!!

English summary
Can BJP form a non-Edappadi palanisamy alliance and What is TTV Dinakaran and Sasikala's stand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X