போயஸ் கார்டனில் பரபரப்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கிளம்பிய பிரபலம்.. கையில் "15".. அலர்ட் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த தேர்தலில் அதிமுக பெறப்போகும் வாக்கு சதவீதம் என்ன என்பதை தமிழகமே எதிர்நோக்கியிருக்கும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வியூகம் ஒன்று கிளம்பியிருக்கிறது.

அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் சசிகலா.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் 30 வருடம் லாபி செய்தவருக்கு, எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையும் எப்போதோ வழிக்கு கொண்டுவந்திருக்க முடியும்.. ஆனாலும், ஏதோ ஒரு காரணத்துக்காக மென்மை போக்கை முன்னெடுத்து வருகிறார். ஆனால் அது சசிகலாவுக்கு கைகொடுக்கவில்லை என்றேதான் சொல்ல வேண்டும்.

Can Chennai Poes Garden Sasikala capture AIADMK soon and what are the 15 questions against Edappadi Palanisamy

நீதிமன்ற உத்தரவுகள்: ஒருபக்கம் கோர்ட் நடவடிக்கைகள், மறுபுறம் ஆன்மீக சுற்றுப்பயணம் என மேற்கொண்டும்கூட, சசிகலாவின் வியூகங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை.. சிறையில் இருந்து 3 வருடமாகிவிட்டது.. அதிமுகவை எடப்பாடியிடமிருந்து மீட்பார் என சசிகலாவிடம் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து ஏமாந்தே போய்விட்டார்கள்.

அனைத்து வியூகங்களும் தோல்வியடைந்த நிலையில், பாஜகவின் கடைக்கண் பார்வைக்காக தவமிருந்து, அதிலும் தோல்வியையே சந்தித்துவிட்ட நிலையில், நடந்து முடிந்த எம்பி தேர்தலில் சசிகலாவின் சுவடு காணாமலேயே போய்விட்டது..

தேர்தல்கள்: 2021 தேர்தலிலேயே அவரது ஆதரவாளர்கள் களமிறக்க நினைத்தார் முடியவில்லை.. பிறகு 2024 தேர்தலிலும் முடியவில்லை.. இதைபற்றி கேட்டால், 2026- தேர்தல் தேதிதான் நம்முடைய இலக்கு என்கிறாராம் சசிகலா.. இப்போதெல்லாம் சசிகலா இல்லத்துக்கு ஆட்கள் வருவதும் குறைந்து போய்விட்டது. அதனால்தான், கழக தொண்டர்கள் அனைவருக்கும் என சொல்லி அதிமுகவினருக்கு ஒரு விண்ணப்ப படிவம் அனுப்பியிருக்கிறார் சசிகலா.

அது பார்ப்பதற்கு உறுப்பினர் சேர்க்கை போலுள்ளதாக சொல்கிறார்கள்.. அதேசமயம், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 15 கேள்விகள் அடங்கிய இந்த படிவத்தை கடிதம் போலவே அனுப்பியிருக்கிறாராம் சசிகலா.

புலம்பல்கள்: அதிமுகவில் எந்த பிடிப்பும் இல்லை - தினகரனும் சேர்த்துக்கொள்ளவில்லை - பாஜகவும் தன்னை புறக்கணித்து விட்டது என்கிற புலம்பல்கள் அதிகரித்துவிடவும்தான், அரசியலில் நானும் இருக்கிறேன் என காட்டிக்கொள்ள, தொண்டர்களை ஒருங்கிணைக்கப்போகிறேன் என ஒரு தோற்றத்தை உருவாக்க முனைந்திருக்கிறாராம் சசிகலா.

இப்போது விஷயம் என்னவென்றால், எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து அடுத்த நகர்வை துவங்கியிருக்கிறாராம்.. அதாவது, "சிலர் எடுத்துள்ள தவறான முடிவுகளுக்கு இந்த தேர்தல் முடிவு பாடமாக இருக்கும்" என்று எம்பி தேர்தலின்போது வாக்கு செலுத்திவிட்டு சசிகலா பேட்டியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி: சசிகலா இப்படி சொல்லியிருந்தது எடப்பாடியை குறிப்பிட்டுத்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. இதற்கு பிறகுதான் விண்ணப்ப படிவங்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் சசிகலா.

ஆனால், எடப்பாடி பழனிசாமியை மட்டும் எதிர்க்கிறாரா? அல்லது டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸையும் சேர்த்து எதிர்க்க போகிறாரா? அல்லது ஒன்றிணைந்து செயல்பட போகிறாரா? அல்லது தனி அணியை உருவாக்குவாரா? என்று தெரியவில்லை.. எவ்வளவுதான் முட்டிமோதினாலும், அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் தன்பக்கம் சசிகலாவால் ஒருபோதும் 'சாய்க்க' முடியாது என்றே கணிப்புகள் கூறுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+