Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேக வேகமாக.. சைக்கிள் கேப்பில் கிளம்பிய ஜெயக்குமார்.. அதே திரி.. அதே திமுக.. அதே காங்கிரஸ்.. பார்ரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியின் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறதாம் அதிமுக.. இப்படிப்பட்ட சூழலில், மறுபடியும் ஒரு சரவெடியை கொளுத்தி, திமுக பக்கம் வீசியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். என்னவாம்?

கடந்த தேர்தலின்போது, எடுத்த எடுப்பிலேயே 10 சீட்டுக்களை லட்டு போல காங்கிரசுக்கு அள்ளி தந்தது திமுக.. ஆனால், இந்த முறை அவ்வளவு சீட் தர வாய்ப்பில்லை போலும்.
20 சீட் கேட்டால்தான், 15 சீட்டாவது கிடைக்கும் என்பதால், சீட் எண்ணிக்கையை உயர்த்தி கேட்கும்படி, மேலிட காங்கிரஸ் அழகிரி தலைமை பொறுப்பில் இருந்தபோதே உத்தரவிட்டதாம். இப்போது, புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

Can Congress alliance with AIADMK and what did Jayakumar say about DMK Alliance, Tamil Nadu BJP

என்ன காரணம்: செல்வப்பெருந்தகையை பொறுத்தவரை, அழகிரி பதவியில் இருந்தபோது 8 சீட்டுகள் வரை ஒதுக்க திமுக முன்வந்ததால், தன்னுடைய தலைமையில், எப்படியாவது இரட்டை இலக்க சீட்டுக்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருவதாக தெரிகிறது. இந்த சூழலில்தான், கலைஞரின் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது..

இந்த திறப்பு விழாவில், காங்கிரசின் 8 எம்.பி.க்களும் கலந்து கொள்வதாக இருந்ததாம். "கலைஞர் நினைவிட திறப்பில் கலந்து கொண்டுவிட்டு டெல்லி வருகிறேன்" என்று காங்கிரஸ் தலைமைக்கு தகவல் அனுப்பினாராம் செல்வப்பெருந்தகை..

திறப்பு விழா: ஆனால், அது ஏற்கப்படாமல், உடனே டெல்லிக்கு வாருங்கள் என உத்தரவு வந்ததால், செல்வப்பெருந்தகையும் விழாவில் கலந்து கொள்ளவில்லையாம். இப்படி மீடியாக்களில் கசிந்த தகவல்களை, காங்கிரஸ் தலைவர்கள் மறுத்துள்ளனர் என்றாலும், திமுகவுடனான கூட்டணி இன்னும் இழுபறியாகவே உள்ளது. இந்த நேரத்தில்தான் மீண்டும் "ரீ என்ட்ரி" தந்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இப்படித்தான் ஒருமுறை, "திருமாவளவனுக்கு விருப்பம் இல்லாமல்தான் திமுகவில் இருக்கிறார். தமிழகத்தில் தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருந்து விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வெளியேறும்" என்று ஜெயக்குமார், பற்ற வைத்த நெருப்பு, திமுக கூட்டணியில் கொழுந்துவிட்டு எரிந்தது.

அர்த்தம் என்ன: ஜெயக்குமார் ஏன் இப்படி சொன்னார்? எதற்காக சொன்னார்? என்ற அர்த்தமே விளங்காமல் அதிமுக தொண்டர்கள்தான் குழம்பி போனார்களே தவிர, திருமாவளவன் இப்போதுவரை திமுக கூட்டணியில் படுஸ்டிராங்காகவே உள்ளார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தயார் என்று ரவிக்குமாரும் அறிவித்துவிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு ஜெயக்குமார் தந்த பேட்டியில், "இண்டியா கூட்டணி என்பது கொள்கையின் அடிப்படையில் உருவானது கிடையாது. கொள்கையின் அடிப்படையில் உருவான கூட்டணிதான் நீடித்து இருக்கும். நான் ஏற்கனவே சொன்னதுபோல் தான். அனைத்தும் நெல்லிக்காய் மூட்டைகள். எப்போது வேண்டுமானாலும் சிதறுவதற்கான வாய்ப்பு INDIA கூட்டணியில் இருக்கிறது.

திமுக கூட்டணி: கூட்டணி கட்சியினரை வாங்க... வாங்க.... சீக்கிரம் வாங்க உட்கார்ந்து பேசலாம்" என்று திமுக அவசரப்படுத்திக் கொண்டிருக்கிறது.. ஆனால் எங்கள் அணிக்கும் வருபவர்கள் வரத்தான் செய்வார்கள்... அதனை யாராலும் தடுக்க முடியாது. கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். திமுக இருக்கும் கட்சிகள் அதிமுக அணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது" என்றார் ஜெயக்குமார்.

ஆனால், இதுவரை ஒருத்தர்கூட அதிமுக பக்கம் போகவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸின் பெயரை சொல்லியே ஜெயக்குமார் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

செல்வப்பெருந்தகை: செல்வப்பெருந்தகையின் கருத்துக்களை பார்த்தால் திமுக காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலையில் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. அதற்காக நாங்கள் யாரையும் எங்கள் கூட்டணிக்கு வருமாறு கெஞ்சவில்லை..,.

எங்களுக்கு பயந்தே திமுக தங்கள் கூட்டணியில் அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. உடனே ஒப்பந்தம் , உடனே கையெழுத்து போட்டு தொகுதி உடன்பாட்டை வெளியிடுகிறார்கள். இதில் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? காரணம் அவர்களை விட்டால் நேராக அதிமுகவுக்கு வந்துவிடுவார்கள் என்பதால்தான்.
அவசரம் ஏன்: அதனால், எங்களுக்கு பயந்தே தொகுதி பங்கீட்டை அவசர அவசரமாக முடிக்கிறார்கள். இதனால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும்? யார்-யார் எந்தெந்த கூட்டணிக்கு செல்வார்கள் என்பது இன்னும் 10 நாளில் தெரியும்.

அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் சேர கட்சிகள் தயாராக உள்ளன. ஆனால் எந்தெந்த கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேரும் என்பதை இந்த நேரத்தில் சொல்வது சரியாக இருக்காது. எங்கள் தலைமையிலான கூட்டணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பது நிச்சயமாக இன்னும் 10 நாளில் தெரியும் என்றார்.

திமுக கூட்டணி: "திமுக கூட்டணி உடையும்" என்று மட்டுமே ஜெயக்குமார் சொல்லிக் கொண்டிருக்கிறாரே, அதிமுக கூட்டணியில் யார் யார்? என்பது குறித்து எதுவுமே சொல்லவில்லை.. அதேசமயம், அதிமுக பக்கமும் திமுக கூட்டணியிலிருந்து யாரும் செல்வதற்கான அறிகுறியும் தென்படவில்லை..

எனினும், மூத்த தலைவர் ஜெயக்குமார் "நெல்லிக்காய் மூட்டை சிதறும்" என்று சொல்லியிருப்பதால், தமிழக அரசியல் களம் மாற போகிறதா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+