"கிலி"யில் எடப்பாடி.. கடைசி சான்ஸூகள் இதான்.. கரெக்ட்டா செக் வைக்கும் பாஜக? குறுக்கே தினகரன் வேற
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2 முக்கிய விஷயங்களை பாஜக மேலிடம் முன்வைத்து காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் எந்த அளவுக்கு இருக்கும் என்பதுதான் உறுதியாக தெரியவில்லை.
பொதுச்செயலாளராக பதவியேற்றதையடுத்து, கட்சியை பலப்படுத்துவது, கூட்டணி விவகாரம் என அடுத்தடுத்த பணிகளில் எடப்பாடி பழனிசாமி இறங்கிவிட்டார்.
ஆனால், பொதுச்செயலாளராக இவர் பதவியேற்றதே தவறு என்று இன்னமும் மூத்த தலைவர்கள் சிலர் விமர்சித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சீனியர்: அதிமுக சீனியர் தலைவர் கேசி பழனிசாமி சொல்லும்போது, "தவறுகளை மிகச்சரியாக செய்பவர் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக விதிகளின்படி, உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை முடிவடைந்ததற்கு பிறகு, அந்த உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.. இதுதான் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் கடைப்பிடிக்கப்படும் விதிகள், நடைமுறைகள்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளரானதும் முதல் கையெழுத்தாக, வரும் ஏப்ரல் 5ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்கிறார்.
ஒப்புதல் வாக்குமூலம்: அப்படியானால், இவரே ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டதுபோல ஆகிவிட்டது. உறுப்பினர் சேர்க்கையே நடைபெறாமல், உறுப்பினர் சேர்க்கையே முற்றுப்பெறாமல், உறுப்பினர்களால் அல்லாமல், தலைமைக்கழக நிர்வாகிகளால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தன்னுடைய திறமைகளால், நீதிமன்றத்தால் அங்கீகாரம் பெற்று, இன்றைக்கு இந்த பதவியை பிடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்கிறார்.. சீனியர்கள் இப்படி பொருமலில் இருந்தாலும், பொதுச்செயலாளராக எடப்பாடியை அங்கீகரிக்க வேண்டியது தேர்தல் ஆணையம்தான்.

இடைக்கால ஆணை: அதாவது, திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின்கீழ் தேர்தல் நடந்தது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும்கூட, திருத்தப்பட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை ஒப்புதல் தந்ததில்லை.. திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் தராத ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை, எப்படி தேர்தல் ஆணையம் இந்த முறையும் ஒப்புதல் தரும்? நிச்சயம் தராது என்கிறார்கள்.. நீதிமன்றம் வழங்கிய இந்த "இடைக்கால ஆணையே" வெற்றி என்றால், ஜெயச்சந்திரன் என்ற தனி நீதிபதி ஓபிஎஸ்ஸூக்கு அன்று சாதகமாக இடைக்கால ஆணையை பிறப்பித்தாரே, அதையும் நாம் வெற்றியாக எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
சந்தேகங்கள் : எனினும் எடப்பாடியின் கைக்கு கிட்டத்தட்ட அதிமுக சென்றுவிட்டது.. தேர்தல் ஆணையம் முடிவு என்னவாக இருக்க போகிறது? பாஜக இதில் எத்தகையை முடிவு எடுக்க போகிறது? ஒருவேளை ஆணையம் ஒப்புதல் தந்துவிட்டால், ஓபிஎஸ் அரசியல் என்னவாகும்? என்ற அடுத்தடுத்த சந்தேகங்கள் வலுவாகி வருகின்றன.. இது தொடர்பாக பேசவே, கடந்த வாரம் மூத்த தலைவர் தம்பிதுரை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது.. இதற்கு நடுவில், தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி, ஹைகோர்ட்டில் எடப்பாடி மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ள நிலையில், அதன் முடிவு இன்று எப்படி வரப்போகிறது என்று தெரியவில்லை.

கிலியில் எடப்பாடி: கர்நாடக தேர்தலையொட்டி, அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவையாக இருக்கிறது.. அப்படியானால், பொதுச்செயலாளராக தன்னை அதிமுக தேர்வு செய்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உதவ வேண்டும் என்றும், கர்நாடக தேர்தலில் அதிமுகவுக்கு 3 சீட் தரவேண்டும் என்றும் அதிமுக பாஜக மேலிடத்திடம் கோரிக்கையை வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், கர்நாடக தமிழர்களிடம் அதிமுகவுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்ற புள்ளி விவரங்களை மேலிடம் தெரிந்து வைத்திருப்பதால், "இந்த முறை நீங்கள் போட்டியிட வேண்டாம். பாஜவை ஆதரியுங்கள்" என்று மட்டும் கட் அட் ரைட்டாக பேசும் என்று தெரிகிறது..
எனினும் அதிமுகவுக்கு குறைந்தது 1 சீட்டாவாவது ஒதுக்க வேண்டும் என்ற முடிவில் அதிமுக இருப்பதாக தெரிகிறது.. அப்படியானால், இதற்கெல்லாம் அதிகாரப்பூர்வ இரட்டை இலை சின்னம் வேண்டும், இதை வேட்பாளர் பெறுவதற்கு ஏ பார்ம், பி பார்மில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடும் அதிகாரத்தை பெற்றிருக்க வேண்டும்... இந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம்தான் தர வேண்டும்.. இதுக்கெல்லாம் மேலிடம் அவ்வளவு எளிதில் ஓகே சொல்லாது என்கிறார்கள்..
இதற்கு நடுவில் இன்னொரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது.. எம்பி தேர்தலில் ஓபிஎஸ் + தினகரனை பாஜக அரவணைக்க காரணமே தென்மண்டல முக்குலத்தோர் வாக்குகள்தான்.. இதை எடப்பாடியும் நன்கே அறிந்து வைத்துள்ளார். கடந்த ஒரு வருடகாலமாக தென்மண்டலங்களில் கவனம் செலுத்தியும், முக்குலத்தோர் ஆதரவை எடப்பாடியால் பெற முடியவில்லை.. எனினும், எம்பி தேர்தலில், வாய்ப்பு தந்தால், தன்னுடைய செல்வாக்கை நிரூபித்து காட்டுவதாக டெல்லிக்கு கோரிக்கை வைத்துவருகிறாராம்..
உண்மையை சொல்லப்போனால், தென்மண்டலங்களில் டிடிவி பெற்ற வாக்கு சதவீதத்தை எடப்பாடியால் முறிப்பதே கடினம்தானாம்.. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவை எடப்பாடியால் முழுமையாக பெற முடியுமா? அல்லது ஓபிஎஸ் தனித்து செயல்பட்டால் மட்டும் இந்த வாக்குகளை பெற்றுவிடுவாரா? என்றெல்லாம் தெரியவில்லை.. எனவே, எடப்பாடியின் கணக்குகள் ஒவ்வொன்றையும், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை முன்னிறுத்தியே அவைகளை மேலிடம் தகர்த்துவிடும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.. என்னதான் நடக்க போகிறது? தெரியவில்லை.. பார்ப்போம்..!!
-
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications