"ஹெவி பிரஷர்".. கொங்குவிலும் ஓபிஎஸ்ஸா.. எடப்பாடியை திணறடிக்கும் பாஜக.. "பரமபதம்" கேம் ஸ்டார்ட்

எடப்பாடி பழனிசாமி யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற ஆர்வம் எழுந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? இல்லையா? என்ற அலசல்கள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.

அதிமுக உட்கட்சி விவகாரம் தீர்ந்தால் மட்டுமே, கூட்டணி வலுவடையும் என்ற நிலை உள்ளது.. அப்படி இருக்கும்போது, மெகா என்று எதை முன்னிறுத்தி எடப்பாடி பேசினார் என்ற சந்தேகம் வட்டமடிக்கிறது.

டிடிவி + பாஜக + பாமக + புதிய தமிழகம் + பாரிவேந்தர் + என இத்தனை பேரையும் ஒன்றிணைக்கலாம் என்ற முடிவுடன் மெகா கூட்டணி என்று எடப்பாடி சொல்லியிருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

65 சப்போர்ட்

65 சப்போர்ட்

எனினும், எடப்பாடி பழனிசாமி சொல்லும் மெகா கூட்டணி என்பது இன்னைக்கு நடைமுறை சாத்தியமில்லை என்றே அரசியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.. எடப்பாடி + ஓபிஎஸ் இணைந்துதான், 33 சதவீதத்தை வைத்துள்ளனர்.. இதில் இருவரும் பிரியும்போது, வாக்குகளும் பிரிந்து, அது கட்சியின் வெற்றி வாய்ப்பை மீண்டும் ஒருமுறை பாதித்துவிடும் என்பதே தொண்டர்களிடையே கவலையாக இருந்து வருகிறது.. 62 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தாலும்கூட, களநிலவரமும், தொண்டர்கள் மனநிலையும் இப்போதுவரை உறுதியாக தெரியாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது.

ரத்தத்தின் ரத்தங்கள்

ரத்தத்தின் ரத்தங்கள்

எடப்பாடியால்தான், கட்சி உடைந்துள்ளது என்பதும், ஜெயலலிதாவின் பதவிக்கே குறி வைத்து நகர்த்தி வரும் அரசியலும் தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும் தருவதாக சொல்கிறார்கள்.. எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சியை, இன்று பாஜக பஞ்சாயத்து செய்யும் நிலைமையில் கொண்டு வந்துவிட்டுவிட்டார்களே என்ற கவலையும் ரத்தத்தின் ரத்தங்களை சூழ்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, ஓபனாகவே எடப்பாடிக்கு அழைப்பு விடுத்துவிட்டாலும், பாஜகவை இந்த விஷயத்தில் பஞ்சாயத்து செய்யும்படி, மறைமுகமாக கேட்டுக் கொண்டாலும், முடிவு எடுக்க போவது என்னவோ எடப்பாடியாகவே இருக்கிறார்

விமர்சனம்

விமர்சனம்

பாமக தன்னுடன் கூட்டணி வைக்கும் என்ற கணக்கும் எடப்பாடிக்கு உள்ளதாக தெரிகிறது-. ஆனால், சமீபகாலமாகவே, அன்புமணி ராமதாஸ், அதிமுகவையும் சேர்த்துதான் விமர்சித்து வருகிறார்.. திமுகவுடன் கூட்டணி வைக்கவே, அதிமுகவை விமர்சிப்பதாக சொல்லப்பட்டு வந்தாலும், இதுவரை பாமகவுடனான கூட்டணி குறித்து திமுக எந்த முடிவையும் எடுக்கவில்லை.. ஒருவேளை கூட்டணிக்கு சம்மதிக்காத பட்சத்தில்தான், அதிமுக -பாஜக கூட்டணி பற்றி பாமக முடிவெடுக்கும் என தெரிகிறது..

டபுள் குழப்பம்

டபுள் குழப்பம்

அதேபோல, டிடிவி தினகரனை பொறுத்தவரை, திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார் என்று அறிவித்திருந்தாலும், அது எடப்பாயுடனான கூட்டணிதானா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை. டிடிவியை இந்த முறையாவது எடப்பாடி ஏற்பாரா என்பதும் உறுதியாகவில்லை.. இதெல்லாம் எதுவுமே தெரியாத நிலையில், திடுதிப்பென்று மெகா கூட்டணி என எடப்பாடி அறிவித்தது, பாஜகவுக்கே குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதாம்.. பாஜகவை பொறுத்தவரை, இரட்டை இலையை முடக்கிவிட்டு, மகாராஷ்டிரா பாணியை உருவாக்க வேண்டும், அதேசமயம் யாருக்கும் பாதகம் இல்லாத ஒரு நியாயமான டீலை செய்ய நினைப்பதாக சொல்கிறார்கள்..

ரிஸ்க்

ரிஸ்க்

காரணம், அதிமுகவில் எடப்பாடி பெரிய சக்தி என்றாலும், ஓபிஎஸ்ஸுக்கும் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளதை மறுக்க முடியாது.. அவருக்கும் தொண்டர்களிடம் செல்வாக்கு இருக்கவே செய்கிறது.. அதை மறைத்துக் கொண்டு சிலர் பேசுவதால்தான் பிரச்சனையே வெடிக்கிறது.. முக்கியமாக, கொங்கு மண்டலத்தில் வாக்குகளை எடுக்க வேண்டுமானாலும் ஓபிஎஸ்ஸும் தேவை.. காரணம், கொங்குவிலும் ஓபிஎஸ்ஸுக்கு பலம் உள்ளது என்கிறார்கள்.. ஜெயலலிதாவால் அடையாளப்படுத்தப்பட்டவர், அவரது விசுவாசி என்ற அடையாளம் இன்னமும் கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் மீது உள்ளதாலும், அவரை கட்சியில் இருந்து எடப்பாடி நீக்கியதால், அனுதாபமும் ஓபிஎஸ்ஸூக்கு ஏற்பட்டுள்ளதால், அவைகள் வாக்குகளாக மாறக்கூடும் சூழல் உள்ளதாம்.

ரிஸ்க்

ரிஸ்க்

அதனால், யதார்த்தத்தை உணர்ந்து எடப்பாடி தரப்பு முடிவெடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பாஜகவை எதிர்த்து எடப்பாடி ரிஸ்க் எடுக்க நினைக்கிறாரா? என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்கள் அதிமுக தரப்பில்.. ஒருவேளை பாஜகவை எதிர்த்து துணிந்து முடிவு எடுத்தாலும், அது பாம்பு வாயில் விழுந்து கீழே சறுக்கிவிடும் பரமபத விளையாட்டு போலதான் அமையும், இதற்கு பேசாமல், ஓபிஎஸ்ஸை அரவணைத்தே செல்லலாம், அது அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் என்று அரசியல் விமர்சகர்களும் கருத்து சொல்கிறார்கள்... பாஜக மேலிடத்திருந்து பல்வேறு வகைகளில் எடப்பாடிக்கு நெருக்கடிகள் இனி கூட தொடங்கிவிடும் என்று செய்திகள் கசிந்து கொண்டிருக்கும் நிலையில், என்னதான் செய்ய போகிறார் எடப்பாடி என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+