சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஸ்கெட்ச்".. இதென்ன லிஸ்ட்லயே இல்லயே.. 2 வலுவான பாயிண்ட்.. காலரை தூக்கும் எடப்பாடி டீம்.. அப்ப ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனராம்

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும், எடப்பாடி பழனிசாமி பெருத்த நம்பிக்கையில் உள்ளாராம்.. என்ன காரணம்?

Recommended Video

    OPS-EPS இணைகிறார்களா?

    அதிமுக பொதுக்குழு விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது..

    கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பில் இன்று கூறியுள்ளது.

    அதிமுகவில் எல்லோரும் ஒன்றுபட வேண்டும்.. தனிநபர் சர்வாதிகாரம் நடக்காது.. ஜெ. சமாதியில் ஓபிஎஸ் பேட்டி அதிமுகவில் எல்லோரும் ஒன்றுபட வேண்டும்.. தனிநபர் சர்வாதிகாரம் நடக்காது.. ஜெ. சமாதியில் ஓபிஎஸ் பேட்டி

     சட்டென மாற்றம்

    சட்டென மாற்றம்

    அதேபோல, ஜுன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இனிமேல், பொதுக்குழுவை எடப்பாடி தனியாக கூட்ட முடியாது.. அப்படியே கூட்டினாலும், அதற்கு ஓபிஎஸ் கையெழுத்து தேவை. இந்த இடைப்பட்ட காலத்தில் எடப்பாடியின் நியமனங்கள் எதுவும் செல்லாது என்பதே இன்றைய தீர்ப்பாக உள்ளது. நீதிமன்றம் சொல்லி உள்ள இந்த தீர்ப்பின்படிதான், இத்தனை காலமும் இரு தலைவர்களும் செயல்பட்டு வந்த நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கிய பிறகுதான், எல்லாமே நடுவில் மாறியது..

     ஹேப்பியில் ஓபிஎஸ்

    ஹேப்பியில் ஓபிஎஸ்

    இனி பழைய நிலைமையே திரும்பி உள்ளது.. இதன்மூலம் ஓபிஎஸ், இழந்த தன்னுடைய அதிகாரத்தை மீண்டும் பெற்று விட்டார் என்றே சொல்லலாம். தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால், துள்ளி குதித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அவரது இல்லம் முன்பு பட்டாசு வெடித்து ,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. மற்றொருபுறம், தன்னுடைய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.. எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் தெரிகிறது.

     3 + காரணங்கள்

    3 + காரணங்கள்

    இந்த மேல்முறையீடு தங்களுக்கு நிச்சயம் வெற்றியை தரும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். இதற்கு சில காரணங்களையும் முன்வைக்கிறார்கள்.. குறிப்பாக, "அன்று பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லுபடியாகாது என்று நீதிபதிகள் யாரும் தங்கள் தீர்ப்பில் சொல்லவில்லையே.. 23ம்தேதி என்ன நடந்ததோ, அது அப்படியே இருக்கிறது.. ஆனால், பொதுக்குழுவை கூட்டுவதற்கு மட்டும் ஆணையம் நியமிக்கப்படுகிறது. அவ்வளவுதானே? இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது?

     டிஸ்மிஸ்

    டிஸ்மிஸ்

    இனி பொதுக்குழு கூட்டப்பட்டது என்றால், இதே ஒற்றைத்தலைமை என்கின்ற தீர்மானம் கண்டிப்பாக வரும்.. கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க போகிறோம்.. இதுதான் இனி நடக்க போகிறது.. ஏனென்றால், 11ம் தேதி பொதுக்குழு நடந்தவைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினார்கள், அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.. பொதுக்குழுவுக்கு உத்தரவு தரப்பட்டு, அந்த அடிப்படையில்தான் பொதுக்குழுவும் நடந்துள்ளது.. சட்டத்திற்கு உட்பட்டுதான் அன்று பொதுக்குழுவை நடத்தினோம். இங்கே சட்டமீறல் எங்கே உள்ளது?

     ரத்தத்தின் ரத்தங்கள்

    ரத்தத்தின் ரத்தங்கள்

    எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியதை போலவேதான், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் முழுமனதாகவே தீர்மானங்களை ஏற்றுக்கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர்களை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்கின்றனர்.. அப்படித்தான் எடப்பாடியையும் தேர்வு செய்துள்ளனர்.. 2000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்படி தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்... இங்கே கட்சி சார்பான விதிமீறல் என்று எங்கே உள்ளது?

     ஆர்டர் + கோர்ட்

    ஆர்டர் + கோர்ட்

    ஒருவேளை இனி மேல்முறையீடு சென்றால்கூட, எடப்பாடிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்.. இன்றைய தின தீர்ப்பு , அடிப்படையில் சென்றால்கூட, ஒற்றை தலைமை என்ற தீர்மானம் பொதுக்குழுவில் வரும்.. மீண்டும் எடப்பாடியாரே தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.. அன்றைக்கு அதிமுக ஆபீசுக்கு சென்று கதவை உடைத்து, வன்முறையில் ஈடுபட்டதை தமிழகமே பார்த்தது.. அவர்கள் நீதிமன்றத்தை நம்பினாலும், நாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மட்டுமே இதுவரை பின்பற்றி இருக்கிறோம்.. கட்சி விதிகளையும் மீறவில்லை+ நீதிமன்ற உத்தரவையும் மீறவில்லை.. இந்த 2 விஷயத்தில் நாங்கள் சரியாகவே உள்ளோம்.. மேலும், மக்களையும், தொண்டர்களையும் நம்பி உள்ளோம்" என்கின்றனர்.

    English summary
    Can Edapadi Palanisamy win the appeal and What are Edappadi supporters saying எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனராம்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X